
ஏமாற்றம்
தொடக்க வீரராக களமிறங்கிய ருத்துராஜ் கெய்க்வாட் மற்றும் இஷான் கிஷன் களமிறங்கினார். ருத்துராஜ் 4 ரன்களுக்கு ஆட்டமிழந்தார். இதனையடுத்து ஸ்ரேயாஸ் ஐயர் விராட் கோலி இடத்தில் விளையாடி அதிரடியாக விளையாடினார். ஸ்ரேயாஸ் 16 பந்துகளில் 25 ரன்கள் குவித்து பெவிலியன் திரும்பினார்.

ஆட்டமிழப்பு
இஷான் கிஷன் அதிரடியாக விளையாடினாலும், சிங்கிள்ஸ் ஆட தவறினார். இதனால் 31 பந்துகளில் 34 ரன்கள் சேர்த்தார். நடுவரிசையில் களமிறங்கிய ரோகித் சர்மா 15 பந்துகளை எதிர்கொண்ட 7 ரன்கள் மட்டுமே எடுத்தார். இதனையடுத்து இந்திய அணி 93 ரன்களுக்கு 4 விக்கெட் இழந்து தடுமாறியது.

27 பந்துகளில் அரைசதம்
இதனையடுத்து சூர்யகுமார் யாதவ் மற்றும் வெங்கடேஷ் ஐயர் ஜோடி சேர்ந்து அதிரடியாக விளையாடி ரன்களை சேர்த்தனர். குறிப்பாக சூரியகுமார் குமார் யாதவ் தனது டிரெட் மார்க் ஷாட் மூலும் சிக்சர்களை பறக்கவிட்டார். 27 பந்துகளில் அவர் அரைசதம் விளாசினார்.

இமாலய இலக்கு
மறுமுனையில் தமிழக வீரர் வெங்கடேஷ் ஐயர் அதிரடியாக ஆடி சூரியாவுக்கு நல்ல ஆதரவு வழங்கினார். இந்த ஜோடி கடைசி 5 ஓவரில் 86 ரன்கள் விளாசியது. சூர்யகுமார் யாதவ் 31 பந்துகளில் 65 ரன்கள் சேர்த்தார். இதில் 7 சிக்சர்கள் அட்ங்கும். இதனால் இந்திய அணி 20 ஓவர் முடிவில் 184 ரன்கள் குவித்தது. இந்தப் போட்டியை வென்றால் இந்தியா நம்பர் 1 இடத்தை தரவரிசையில் பிடித்துவிடும்.


Click it and Unblock the Notifications











