Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

3 பந்துக்கு 3 சிக்சர் தேவை.. 11 பேரும் காட்டு மிராண்டிகள்..! இறுதியில் நடந்தது என்ன? பரபர நொடிகள்

கொல்கத்தா: ஒரு அணியில் ஒரு அதிரடி பேட்ஸ்மேன் இருக்கலாம்.. அணி முழுவதும் அதிரடி பேட்ஸ்மேன்கள் இருந்தால் எதிரணிக்கு எவ்வளவு தலைவலியாக இருக்கும்.

அப்படி பட்ட அணியை, தங்களது தலைசிறந்த பந்துவீச்சாளர்கள் இல்லாமல் சமாளிப்பது எல்லாம் பெரிய காரியம் அல்லவா.

ஆனால், அதனை ரோகித் சர்மாவின் படை எளிதாக , எநருக்கடி கொடுத்து சம்பவம் செய்தது. என்ன நடந்தது என்பதை பார்க்கலாம்.

பந்துவீச்சு படை

பந்துவீச்சு படை

கடைசி டி20 போட்டியில் பந்துவீச்சாளர்களாக ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஹர்சல் பட்டேல், ரவி பிஸ்னாய், அவேஷ் கான் ஆகியோர் தான் இருந்தனர். இதில், தீபக் சாஹர் காயம் காரணமாக வெளியேற, எஞ்சியிருந்த பவுலர்களை வைத்து தான் போட்டியை சமாளிக்க வேண்டும். மற்ற கேப்டன் என்றால் பைத்தியம் பிடித்தி இருக்கும்.

நடுங்க வைத்த பூரான்

நடுங்க வைத்த பூரான்

நிக்கோலஸ் பூரானும்., செஃபர்டும் அதிரடியாக விளையாடி வெற்றியின் அருகில் சென்றார்கள். அப்போது ஷர்துல் தாக்கூர் வீசிய 17.1வது ஓவரில் அவர் அடித்த பந்தை, அபாரமாக ஓடி வந்து இஷான் கிஷன் பிடித்தார். இருப்பினும் செஃபர்ட் இந்தியாவை நடுங்க வைத்தார்.

சபாஷ் ஹர்சல்

சபாஷ் ஹர்சல்

இதில் வெற்றிக்கு 12 பந்துக்கு 31 ரன்கள் தேவைப்பட்டது. ஆட்டத்தின் முக்கியமான 19வது ஓவரை ஹர்சல் வீசினார். கத்தியின் மேல் நடக்கும் அந்த கடினமான வேலையை சிறப்பாக செய்தார் ஹர்சல். முதல் பந்து 2 ரன்கள் போனது. 2வது பந்தில் ஒரு ரன்,மூன்றாவது பந்து டாட் பால், 4வது பந்து ஒரு ரன் என ஹர்சல் கட்டுக்கோப்பாக வீச, செஃபர்டுக்கு அழுத்தம் ஏற்பட, 5வது பந்தை வேகமாக அடிக்க, அதனை ரோகித் கவர் பகுதியில் அபாரமாக பாய்ந்து பிடித்தார்.

Recommended Video

Who is Saurabh Kumar? The spin all-rounder named in India’s Test squad for SL series
கடைசி 6 பந்து

கடைசி 6 பந்து

எனினும் கடைசி பந்து பவுண்டரி போக, கடைசி 6 பந்துக்கு 23 ரன்கள் தேவைப்பட்டது. இம்முறை லார்ட் ஷர்துல் கையில் பந்து சென்றது. ஷர்துல் முதல் பந்தில் ரன் கொடுக்கவில்லை. 2வது பந்து பவுண்டரிக்கு பறந்தது. இதனால் 4 பந்துக்கு 19 ரன்கள் தேவைப்பட்டது. இதில் 3 சிக்சர் அடித்தாலே போட்டி அவ்வளவு தான். ஆனால் 19.3 ஓவரில் ஷர்துல் விக்கெட்டை வீழ்த்தினார். கடைசி 3 பந்தில் 3 சிக்சர் தேவைப்பட்டது. ஆனால் ஷர்துல் தனது அனுபவ பந்துவீச்சு மூலம் கடைசி 3 பந்திலும் ஒரு ரன் கூட விட்டுத்தரவில்லை. இதன் மூலம் இந்திய அணி 17 ரன்கள் வித்தியாசத்தில் வென்றது. சிஎஸ்கேவின் அனுபவம் கைக் கொடுத்ததாக ஷர்துல் தாக்கூர் கூறினார். பலம் வாய்ந்த வெஸ்ட் இண்டீஸை இந்தியா சமாளித்த விதம் பிரமிக்க வைத்தது.

Story first published: Monday, February 21, 2022, 0:34 [IST]
Other articles published on Feb 21, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+