
சச்சின் முயற்சி
அமெரிக்காவில் உள்ள ஆசியாவை சேர்ந்தவர்கள் கிரிக்கெட்டை பார்த்தாலும், இன்னும் அமெரிக்க மக்கள் கிரிக்கெட் பக்கம் வரவில்லை. அதற்கான ஏற்பாடு பணிகள் கடந்த காலங்களில் நடைபெற்றது. சச்சினும், வார்னேவும் இணைந்து டி20 போட்டியில் விளையாடியதிலிருந்து, அமெரிக்காவில் தற்போது நிறைய டி20 தொடரும் நடைபெறுகிறது.

480 ரன்கள் மேல் குவிப்பு
அமெரிக்காவில் கிரிக்கெட்டை வளர்க்க, இந்தியா போன்ற நாடுகள் அங்கு சுற்றுப் பயணம் மேற்கொண்டு விளையாடுவது அவசியம். கடந்த 2016ஆம் ஆண்டு இந்தியாவும், வெஸ்ட் இண்டீஸ் அணியும் இதே மைதானத்தில் மோதியது. அப்போது ஒரே ஆட்டத்தில் 480 ரன்களுக்கு மேல் குவிக்கப்பட்டது.

பிட்ச் ரிப்போர்ட்
இதே போன்ற ஆட்டத்தை இரு அணிகளும் வெளிப்படுத்தினால், பட்டாசாக இருக்கும். அமெரிக்காவில் சர்வதேச போட்டிகள் அதிகம் நடைபெறாததால் பிட்ச் ரிப்போர்ட் தருவது கடினம். எனினும் மைதானத்தின் அளவு சிறியது என்பதால் பேட்ஸ்மேன்கள் பெரிய ஷாட் ஆட முயற்சி செய்வார்கள். ஆனால் பெரும்பாலும் ஆடுகளம் தொய்வாக தான் செயல்படும்.

ரோகித் சாதனை
இன்றைய ஆட்டத்தை இந்திய அணி வென்றால், தொடர்ந்து 8 தொடரை வென்ற கேப்டன் என்ற சாதனையை ரோகித் சர்மா படைப்பார். மேலும் டி20 போட்டியில் 29 வெற்றியை பெறுவார். விராட் கோலி 30 வெற்றிகளை பெற்று 2வது இடத்திலும், தோனி 41 வெற்றியை பெற்று முதலிடத்திலும் உள்ளனர். தொடர்ந்து அடுத்தடுத்து டி20 போட்டி நடைபெறுவதால் ரோகித் சர்மா இவ்விருவரின் சாதனையையும் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











