Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: முக்கிய போட்டியில் காலை வாரிய அபிஷேக் சர்மா, இசான் கிஷன்.. நொறுங்கிய ரசிகர்கள் இதயம்

டி20 உலக கோப்பை கிரிக்கெட் போட்டியில் சூப்பர் 8 சுற்று ஆட்டத்தில் வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இந்திய அணி வெஸ்ட் இண்டீஸ் எதிர்கொண்டது. கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.

இதனை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணியில் ராஸ்டன் செஸ் அதிகபட்சமாக 40 ரன்கள், ஜேசன் ஹோல்டர் 37 ரன்களும், ரோமன் போவல் 34 ரன்களும் எடுத்தனர். இதனால் 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு வெஸ்ட் இண்டீஸ் அணி 195 ரன்கள் எடுத்தது.

இதனை தொடர்ந்து 196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியது. தொடக்க வீரராக அபிஷேக் சர்மா, சஞ்சு சாம்சன் களமிறங்கினர். அபிஷேக் ஷர்மா சுழற் பந்துவீச்சாளருக்கு எதிராக தடுமாறுவார் என்பதால் அவரை கட்டுப்படுத்த ஸ்பின்னர்களை வெஸ்ட் இண்டீஸ் அணி களம் இறக்கியது.

எனினும் சஞ்சு சாம்சன் இது தமக்கு கிடைத்த வாய்ப்பாக அதனை சிறப்பாக பயன்படுத்தி ரன்களை சேர்த்தார். இரண்டு சிக்ஸர், ஒரு பவுண்டரி என அவர் பட்டையை கிளப்பினார். மறுமுனையில் அபிஷேக் சர்மா இரண்டு பவுண்டர்களை அடித்தாலும் அவருடைய அதிரடி ஆட்டம் மிஸ் ஆனது .

11 பந்துகளை எதிர்கொண்ட அவர் அக்கேல் உசேன் பந்துவீச்சில் ஒரு முட்டாள்தனமான சாட்டை ஆடி 10 ரன்களில் அவர் ஆட்டம் இழந்தார். இது இந்திய அணிக்கு மிகப்பெரிய பின்னடைவாக அமைந்தது. இந்த சூழலில் மூன்றாவது வீரராக இசான் கிஷன் களம் இறங்கினார். அவரும் வந்த வேகத்தில் இருந்து அதிரடி காட்டுகிறேன் என்ற பெயரில் தேவையில்லாமல் தூக்கி அடித்து ஆறு பந்துகளில் 10 ரன்கள் எடுத்த நிலையில் ஜேசன் ஹோல்டர் பந்துவீச்சில் ஆட்டம் இழந்தார்.

இதனால் இந்திய அணி 4.3 ஓவர்களில் 41 ரன்கள் எடுத்து இரண்டு விக்கெட்டுகளை இழந்தது. இது இந்திய அணிக்கு பெரிய மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. இந்த போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவினால் தொடரை விட்டு வெளியேற நேரிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, March 1, 2026, 21:36 [IST]
Other articles published on Mar 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+