Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொன்னா நம்புங்க.. தோனி 56 ரன் அடிச்சாரு.. ஆனா ஒழுங்கா ஆடலை.. புட்டு புட்டு வைக்கும் விமர்சகர்கள்!

மான்செஸ்டர் : வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான போட்டியில் தோனியின் பேட்டிங் விமர்சனத்துக்கு உள்ளானது.

இன்னிங்க்ஸின் முடிவில் தோனி 61 பந்துகளில் 56 ரன்கள் குவித்து சிறப்பாக முடித்தார். இருந்தாலும் சிலர் அவரை தொடர்ந்து விமர்சித்து வந்தனர்.

இதனால், தோனி ரசிகர்கள் வெறுப்படைந்தனர். தோனி அரைசதம் அடித்தும் விமர்சிப்பது சரியில்லை என கூறினர். ஆனால், கிரிக்கெட் விமர்சகர்கள் தோனியின் ஆட்டத்தில் என்ன சிக்கல் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளனர்.

தோனி நிதானம்

தோனி நிதானம்

வெஸ்ட் இண்டீஸ் போட்டியில் தோனி தான் சந்தித்த முதல் சில பந்துகளிலேயே ஒரு பவுண்டரி அடித்து, நம்பிக்கை அளித்தார். ஆனால், அதன் பின் பெரும் தடுமாற்றம் துவங்கியது. தேவையற்று டாட் பால் ஆடத் துவங்கினார்.

வேகம் கூட்டிய தோனி

வேகம் கூட்டிய தோனி

கடைசி ஓவரில் தான் தோனி வேகம் கூட்டினார். அந்த ஓவரின் ஆறு பந்துகளையும் தானே சந்தித்த தோனி, 2 சிக்ஸ், 1 ஃபோர் அடித்தார். அந்த ஓவரில் அரைசதமும் கடந்தார்.

நல்ல பேட்டிங்கா?

நல்ல பேட்டிங்கா?

தோனி கடைசி வரை ஆட்டமிழக்காமல் இருந்தார். அவரது ஸ்ட்ரைக் ரேட் 91.80. இது நல்ல பேட்டிங் என்று பொதுவாக கூறப்பட்டாலும், சில முன்னாள் வீரர்கள் இது நல்ல பேட்டிங் என ஒப்புக் கொண்டாலும், தோனி சரியாக பேட்டிங் செய்யவில்லை என்பதே உண்மை என்கிறார்கள் விமர்சகர்கள்.

ஸ்டம்பிங் வாய்ப்பு

ஸ்டம்பிங் வாய்ப்பு

தோனி நேற்றைய போட்டியில் தன் கட்டுப்பாட்டில் இல்லை என்பதற்கு முதல் உதாரணம் இது தான். அவர் சந்தித்த சில பந்துகளிலேயே ஸ்டம்பிங் செய்யப் பட இருந்தார். சுழற் பந்து வந்த திசையை கணிக்கத் தவறியதோடு, பந்தை ஏறி வந்து அடிக்க முற்பட்டு தோல்வி அடைந்தார். விக்கெட் கீப்பர் ஷாய் ஹோப் செய்த தவறால் தோனி தப்பித்தார்.

கட்டுப்பாட்டில் இல்லை

கட்டுப்பாட்டில் இல்லை

ஆப்கானிஸ்தான் போட்டியிலும் தோனி ஸ்டம்பிங் செய்யப்பட்டே ஆட்டமிழந்தார். தோனி இதுவரை இரண்டு முறை மட்டுமே ஸ்டம்பிங் செய்யப்பட்டுள்ளார் எனும் நிலையில், தோனி எந்த அளவு தன் கட்டுப்பாட்டில் இல்லாமல் பேட்டிங் செய்தார் என்பதை புரிந்து கொள்ளலாம்.

பேட்டிங் தடுமாற்றம்

பேட்டிங் தடுமாற்றம்

அடுத்து பேட்டிங் செய்யும் போது பல முறை பந்தை அடிக்க முடியாமல் தவறவிட்டார். அவர் சேர்த்த முதல் 20 ரன்களில் பெரும்பாலானவை பந்தை சரியாக அடிக்காமல் கிடைத்தவை. மேலும், தோனி நிறைய டாட் பால் ஆடியதால், எதிரில் இருந்த பேட்ஸ்மேன்களுக்கு அழுத்தம் ஏற்பட்டது.

Story first published: Friday, June 28, 2019, 12:09 [IST]
Other articles published on Jun 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+