Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விஜய் ஷங்கருக்கு “நோ”.. வாய்ப்பு பெறப் போவது தினேஷ் கார்த்திக்கா? ரிஷப் பண்ட்டா? அணியில் குழப்பம்!

Recommended Video

வாய்ப்பு பெறப் போவது யார் ? அணியில் நீடிக்கும் குழப்பம்

மான்செஸ்டர் : உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி வெற்றி நடை போட்டாலும், அணித் தேர்வில் சில குழப்பங்கள் நீடித்து வருகிறது.

விஜய் ஷங்கர் தனக்கு வாய்ப்பு கிடைத்த மூன்று போட்டிகளில் சொதப்பி இருக்கிறார். அதனால், மாற்று வீரரை தேர்வு செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது இந்திய அணி.

விஜய் ஷங்கர் ஏமாற்றம்

விஜய் ஷங்கர் ஏமாற்றம்

விஜய் ஷங்கர் பாகிஸ்தான் போட்டியில் பந்துவீச்சில் மட்டும் நம்பிக்கை அளித்தார், சிறப்பாக பந்து வீசி 2 விக்கெட்கள் எடுத்தார். எனினும், பேட்டிங்கில் மூன்று போட்டிகளில் சுமாராகவே ஆடினார். குறிப்பாக ஆப்கானிஸ்தான் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிரான போட்டிகளில் முக்கியமான நேரத்தில் அணியை கைவிட்டார். இதனால், அவரை மாற்ற வேண்டிய கட்டாயம் எழுந்துள்ளது.

மிடில் ஆர்டர் சரியில்லை

மிடில் ஆர்டர் சரியில்லை

மிடில் ஆர்டரில் தெளிவான கூட்டணி இல்லாமல் இந்திய அணி திணறி வருகிறது, போட்டிக்கு போட்டி மிடில் ஆர்டரில் இந்திய பேட்ஸ்மேன்கள் தோனி, பண்டியா, ஜாதவ் மாறி மாறி களமிறங்கி வருகிறார்கள். விஜய் ஷங்கர் சரியாக ஆடாத நிலையில், அடுத்து வரும் வீரர் மிடில் ஆர்டர் பிரச்சனையை தீர்த்து வைக்கும் வகையில் இருக்க வேண்டும்.

ரிஷப் பண்ட் வருவாரா?

ரிஷப் பண்ட் வருவாரா?

இந்த நிலையில் பலராலும் கூறப்படும் மாற்று வீரர் ரிஷப் பண்ட் தான். இளம் வீரரான இவர் அதிரடியாக ஆடுவார் என்பதால், பலரது கண்களையும் கவர்ந்துள்ளார். எனினும், இவரது பலவீனம் அதிரடியாக ஆடுகிறேன் என சில சமயம் முக்கியமான நேரங்களில் ஆட்டமிழந்து விடுவார்.

இடது கை பேட்ஸ்மேன்

இடது கை பேட்ஸ்மேன்

ரிஷப் பண்ட் இடது கை பேட்ஸ்மேன் என்பதையும் சிலர் சுட்டிக் காட்டுகிறார்கள். இந்திய அணியில் பேட்ஸ்மேன்களில் தவானுக்கு பின் இடது கை பேட்ஸ்மேன்களே இல்லை. எனவே, ரிஷப் பண்ட்டை அணியில் ஆட வைத்தால், இந்திய அணிக்கு வலது கை - இடது கை பேட்டிங் கூட்டணி கிடைக்கும். இது சில சமயம் அணிக்கு உதவும்.

அனுபவ தினேஷ் கார்த்திக்

அனுபவ தினேஷ் கார்த்திக்

மறுபுறம், சிறந்த பினிஷராக அடையாளம் காட்டப்படும் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக் தன் வாய்ப்பிற்காக காத்துக் கொண்டு இருக்கிறார். பல முறை தினேஷ் கார்த்திக் தன்னை நிரூபித்தும், ஒரு சில போட்டிகளில் அவர் சொதப்பினார் என்பதால் தன் வாய்ப்பிற்காக காத்துக் கொண்டு இருக்கிறார்.

அதிரடியா? அனுபவமா?

அதிரடியா? அனுபவமா?

இந்தியா அடுத்து இங்கிலாந்து போட்டியில் அனுபவ வீரர் தினேஷ் கார்த்திக்கை ஆட வைக்க வேண்டும் என சிலர் கூறி வருகிறார்கள். பெரும்பாலானோர், அதிரடி வீரர் என்பதால் ரிஷப் பண்ட்டை அணியில் சேர்க்க வேண்டும் என கூறி வருகிறார்கள். அதிரடியா? அனுபவமா? என்பதை கேப்டன் கோலி தான் முடிவு செய்ய வேண்டும்.

Story first published: Friday, June 28, 2019, 20:18 [IST]
Other articles published on Jun 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+