Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

விஜய் ஷங்கர் வேண்டாம்.. இங்கிலாந்து போட்டிக்கு ரிஷப் பண்ட் தான் சரி.. ஸ்ரீகாந்த் அதிரடி!

Recommended Video

தொடர்ந்து சொதப்பல்... விஜய் ஷங்கருக்கு எதிராக பொங்கும் ரசிகர்கள்

மான்செஸ்டர் : விஜய் ஷங்கர் தனக்கு கிடைத்த வாய்ப்புகளில் கோட்டை விட்டிருக்கும் நிலையில், ரிஷப் பண்ட்டை தேர்வு செய்ய வேண்டும் என்ற குரல்கள் அதிகரித்து வருகின்றன.

அதில் தமிழகத்தை சேர்ந்த முன்னாள் கிரிக்கெட் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த்தும் இணைந்துள்ளார். நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய ரிஷப் பண்ட்டை களமிறக்க வேண்டும் என விளக்கத்துடன் கூறி இருக்கிறார்.

பாகிஸ்தான் போட்டி

பாகிஸ்தான் போட்டி

ஷிகர் தவான் காயத்தால் உலகக்கோப்பை தொடரில் இருந்து வெளியேறிய நிலையில், விஜய் ஷங்கர் அணியில் இடம் பெற்றார். பாகிஸ்தான் அணிக்கு எதிராக முதலில் வாய்ப்பு பெற்றார். அந்தப் போட்டியில் புவனேஸ்வர் காயமடைந்த நிலையில், அவர் இடத்தை பூர்த்தி செய்து 2 விக்கெட்கள் வீழ்த்தி அசத்தினார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

எனினும், அடுத்த இரு போட்டிகளில் பந்து வீச வாய்ப்பு கிடைக்காத பேட்டிங்கில் ஏமாற்றினார். ஆப்கானிஸ்தான், வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு எதிராக இந்திய அணியின் பேட்டிங் தடுமாறிய போது, விஜய் ஷங்கர் அணிக்கு உதவும் வகையில் நிலைத்து நின்று பேட்டிங் செய்யவில்லை.

ரிஷப் பண்ட் வேண்டும்

ரிஷப் பண்ட் வேண்டும்

அதனால், அவருக்கு எதிரான விமர்சனங்கள் அதிகரித்துள்ளன. ரிஷப் பண்ட்டுக்கு இந்திய அணியில் வாய்ப்பு கொடுக்க வேண்டும் என பலத்த கோஷம் எழுந்துள்ளது. இந்த நிலையில், ஸ்ரீகாந்த் அவருக்கு ஆதரவாக பேசி உள்ளார்.

ஸ்ரீகாந்த் கருத்து

ஸ்ரீகாந்த் கருத்து

ரிஷப் பண்ட் நான்காம் வரிசையில் பேட்டிங் செய்ய வேண்டும் என கூறிய ஸ்ரீகாந்த், அவர் முன்பே இங்கிலாந்தில் விளையாடி உள்ளதால், அவர் நிச்சயம் உலகக்கோப்பை போட்டிகளில் பங்கேற்க வேண்டும் என்றார்.

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து தொடர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் ஒரு போட்டியில் ரிஷப் பண்ட் அபாரமாக ஆடி சதம் அடித்தார். மேலும், உலகக்கோப்பை தொடரில் இந்திய அணி அடுத்து இங்கிலாந்து அணிக்கு எதிராக விளையாட உள்ளதால், ரிஷப் பண்ட்டை களமிறக்க வேண்டும் என்கிறார்.

நிரூபிக்க வேண்டும்

நிரூபிக்க வேண்டும்

அணியில் தற்போது இடம் பெற்று வரும் மிடில் ஆர்டர் வீரர்கள் கேதார் ஜாதவ், விஜய் ஷங்கர் இருவரும் தங்களை நிரூபிக்க வேண்டும். அவர்கள் தங்கள் ஆட்டத்தில் சில மாற்றங்களை செய்ய வேண்டும் என்றார் ஸ்ரீகாந்த்.

Story first published: Friday, June 28, 2019, 17:46 [IST]
Other articles published on Jun 28, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+