Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: என் பேச்சை கேளுங்க.. பும்ராவுக்காக சுப்மன் கில்லிடம் கெஞ்சிய துருவ் ஜூரல்.. என்ன ஆச்சு?

அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் விக்கிக்கு கீப்பர் பேட்ஸ்மேன் துருவ் ஜூரல் பும்ராவுக்காக கேப்டன் கில்லிடம் வாதாடி டி ஆர் எஸ் எடுக்க சொன்னது திருப்புமுனையை ஏற்படுத்தியது. இரண்டு போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரின் முதல் போட்டி அகமதாபாத் நகரில் இன்று தொடங்கியது.

இதில் டாஸ் ஒன்று வெஸ்ட் இண்டீஸ் அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. முதலில் ஆடுகளம் கொஞ்சம் தோய்வாக இருந்ததால் இந்திய பவுலர்களுக்கு கடும் வேலை இருக்கும் என்று வல்லுனர்கள் எதிர்பார்த்தனர்.

Ind vs WI

இந்த நிலையில் ஆட்டத்தின் மூன்று புள்ளி ஐந்தாவது ஓவரில் சிராஜ், தேஜ்நரைன் சந்திர்பால் விக்கெட்டை வீழ்த்தினார். ஓவரில் பும்ரா வீசிய பந்தை வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் கேம்பல் அடிக்கும் முற்பட்டபோது அது மிஸ் ஆனது. எனினும் அந்த பந்து துருவ் ஜுரலிடம் கேட்ச் ஆனது. இதற்கு பும்ராவும் துருவ் ஜூரலும் நடுவருடன் அப்பில் கேட்டனர்.

ஆனால் இதற்கு நடுவர் அவுட் தர மறுத்து விட்டார். இந்த நிலையில் கேப்டன் கில்லும் இதற்கு டிஆர்எஸ் எடுக்க முன்வரவில்லை. ஆனால் துருவ் ஜூரல், கேப்டன் கில்லிடம் சென்று பந்து நிச்சயமாக பேட்டில் பட்டது. அதை நான் உறுதியாக கூறுவேன். ஏனென்றால் அதன் சத்தம் எனக்கு நன்றாகவே கேட்டது. என்னை நம்பி நீங்கள் டி ஆர் எஸ் எடுங்கள் என்று கூறினார்.

முதலில் கொஞ்சம் யோசித்த கில், ஜூரல் இவ்வளவு நம்பிக்கையாக சொல்கிறார் என நினைத்து டிஆர்எஸ் எடுத்தார். இதனை அடுத்து ரீப்ளே பரிசோதனை மூன்றாம் நடுவர் பார்த்தனர். அப்போது பந்து பேட்டில் பட்டதற்கான ஆதாரம் ஸ்நிக்கோ மீட்டரில் தெரிந்தது. இதனை அடுத்து இதற்கு அவுட் என மூன்றாம் நடுவர் முடிவு எடுத்தார்.

இதை அடுத்து பும்ராவுக்கு முதல் விக்கெட் கிடைத்தது. இன்றைய ஆட்டம் முழுவதும் துருவ் ஜூரல் சிறப்பாக விக்கெட் கீப்பிங் பணியை செய்தது மட்டுமல்லாமல், டி ஆர் எஸ் முடிவிலும் கேப்டன் கில்லுக்கு பக்கபலமாக இருந்ததாக ரசிகர்கள் பாராட்டியுள்ளனர். பேட்டிங்கிலும் ஜூரல் சாதித்தால் நிச்சயமாக இந்திய அணியில் முக்கிய இடத்தை பிடிப்பார் என்று ரசிகர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.

Story first published: Thursday, October 2, 2025, 18:59 [IST]
Other articles published on Oct 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+