அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி ஆதிக்கம் செலுத்தி வருகிறது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 162 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய பந்துவீச்சு தரப்பில் சிராஜ் நான்கு விக்கெட்டு களையும், பும்ரா மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.
இதையடுத்து களமிறங்கி இந்திய அணி முதல் நாள் ஆட்டநேரம் முடிவில் இரண்டு விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்த நிலையில் இந்திய அணியில் ரிஷப் பண்ட் காயம் காரணமாக இந்த தொடரில் பங்கு பெறவில்லை.

அவருக்கு பதிலாக விளையாடிய துருவ் ஜூரல் அபாரமாக விக்கெட் கீப்பிங் செய்தது ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. ஜூரல் ஒரு அதிரடி வீரர் என்று நம் அனைவருக்குமே தெரியும். அது மட்டும் இல்லாமல் டெஸ்ட் கிரிக்கெட்டில் ஏற்கனவே அவர் தன்னுடைய திறமையை வெளிப்படுத்துகிறார்.
இதுவரை ஐந்து டெஸ்ட் போட்டிகளில் அவர் மொத்தமாக 255 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் அதிகபட்ச ஸ்கோர் 90 ரன்கள் ஆகும். ஆனால் ஜூரல் பெரிய அளவு இந்திய அணியில் வாய்ப்பு பெற்றது கிடையாது. ரிஷப் பன்ட் இல்லாத நிலையில் இருந்து விக்கெட் கீப்பிங் பணி வழங்கப்பட்டது. அதில் அவர் சூப்பர் மேன் போல் பாய்ந்து நிறைய கேட்ச்களை பிடித்திருக்கிறார். பல கேட்சுகள் காலுக்கு வெளியே இடது புறம் சென்ற போது அதனை துருவ் ஜூரலை ஒற்றை கையால் பாய்ந்து கேட்ச் பிடித்துள்ளார்.
அது மட்டும் இல்லாமல் தம்மை தாண்டி சென்ற பந்துகளை எல்லாம் அவர் அபாரமாக கேட்ச் பிடித்திருக்கிறார். வேகப்பந்துவீச்சுக்கு மட்டும் இல்லாமல் சூழற் பந்து வீச்சுக்கு எதிராகவும் அவர் விக்கெட் கீப்பிங் பணியை அபாரமாக செய்துள்ளதாக கிரிக்கெட் வீரர்கள் பாராட்டுகின்றனர்.
கேட்ச்களை பாய்ந்து பிடிப்பதில் இந்தியாவின் சிறந்த விக்கெட் கீப்பர் என்றால் அது விர்தமன் சாகாதான் தற்போது துருவ் ஜூரல் செயல்பாடு அவரை நினைவுபடுத்தும் விதமாக இருப்பதாகவும் அது மட்டும் இல்லாமல் துருவ் நல்ல உடல் தகுதியுடன் இருப்பதாகவும் கிரிக்கெட் வல்லுனர்கள் பாராட்டியுள்ளனர்.