Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: உலக கிரிக்கெட்டுக்கு நீங்கள் தேவை..பழைய மாதிரி வாங்க..வெஸ்ட் இண்டீஸ் டிரஸிங் ரூம்மில் கம்பீர் பேச்சு

மும்பை: இந்தியாவுக்கு எதிரான இரண்டு போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரிலும், வெஸ்ட் இண்டீஸ் அணி தோல்வியை தழுவியது. இந்த நிலையில் இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பேட்டிங்கில் நல்ல முன்னேற்றத்தை கண்டனர்.

270 ரன்கள் பின்தங்கிய நிலையில் பாலோ ஆன் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடி கூடுதலாக 120 ரன்கள் சேர்த்து இந்தியாவுக்கு 121 என்ற இலக்கை நிர்ணயித்திருந்தது.

Gautam Gambhir

வெஸ்ட் இண்டீஸ் அணியில் கேம்ப்பெல், சாய் ஹோப், நல்ல முன்னேற்றத்தை கண்டனர். எனினும் இந்திய அணி தங்களுடைய அனுபவத்தை பயன்படுத்தி ஏழு விக்கெடுகள் வித்தியாசத்தில் வென்றது. போட்டி முடிவடைந்த உடன் வெஸ்ட் இண்டீஸ் அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு கம்பீர் வந்து வெஸ்ட் இண்டீஸ் வீரர்களுக்கு சில ஊக்கமளிக்கும் பேச்சை வழங்கினார்.

டேரன் சமி தான் கம்பீரை அழைத்து தங்கள் வீரர்களிடம் பேசுமாறு வேண்டுகோள் விட்டிருக்கிறார். இதன் அடுத்து கம்பீர் இந்திய அணியின் ட்ரெஸ்ஸிங் ரூமுக்கு வந்தார். அப்போது பேசிய டேரன் சமி, கம்பீரை அறிமுகப்படுத்தி உலகில் சிறந்த அணியின் பயிற்சியாளராக இருக்கின்றார். அவர் தன்னுடைய அனுபவத்தை உங்களிடம் பகிர்ந்து கொள்ள வந்திருக்கின்றார்.

சில சமயம் மற்றவர்களின் குரலை நாம் கேட்க வேண்டும் என்பதற்காகத்தான் கம்பீரை அழைத்திருக்கிறேன் என்று சமி கூறினார். இதை தொடர்ந்து பேசிய கம்பீர், வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக விளையாடுவது எப்போதுமே பெருமையான விஷயம். சொந்த மண் மற்றும் வெளியே எங்கு இருந்தாலும் சரி நீங்கள் எப்போதும் களத்திற்கு வெளியேவும் களத்திலும் நடந்து கொள்ளும் விதம் மிகவும் அபாரமானது.

நிச்சயம் இந்த தொடர் உங்களுக்கு பல பாடங்களை அனுபவங்களை கொடுத்திருக்கும். உங்களுடைய பணிவும் உங்களுடைய மனித தன்மையும் எங்களுக்கு மிகவும் பிடிக்கும். உலகில் உள்ள அனைத்து அணிகளும் இதை உங்களிடம் இருந்து கற்றுக் கொள்ள வேண்டும். கிரிக்கெட் விளையாட வேண்டும் என்றால் முதலில் ஒரு குறிக்கோள் வேண்டும். அந்த குறிக்கோள் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு இருக்கின்றது.

கிரிக்கெட் மீதான நேசத்தை விட அந்த குறிக்கோள் என்பது முக்கியம். உங்களை பார்த்தால் நிச்சயம் அடுத்த வெஸ்ட் இண்டீஸ் தலைமுறை கிரிக்கெட் வீரர்களுக்கு நீங்கள் நிச்சயம் ஊக்கத்தை அளிப்பீர்கள் என நம்புகிறேன். இரண்டாவது இன்னிங்ஸில் நீங்கள் ஆடிய விதம் உங்களை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்லும் என்று நான் நம்பிக்கை கொள்கின்றேன்.

இது அணி விளையாட்டு. அனைவரும் ஒருங்கிணைந்து விளையாடினால் மட்டுமே வெற்றி கிடைக்கும். சில சமயம் சதம் அல்லது ஐந்து விக்கெட் குறித்து நாம் சுலபமாக பேசுகிறோம். ஆனால் இதுபோன்ற சின்ன சின்ன பங்களிப்பு தான் ஒரு அணியை வெற்றிக்கு வழிவகுக்கும். நான் ஒன்றே ஒன்று சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.

நான் எப்போதுமே அதை நம்புகிறேன். இதை நான் வெறும் வாயால் சொல்லவில்லை. இதயத்தில் இருந்து சொல்கின்றேன். வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட்டுக்கு உலக கிரிக்கெட் தேவையில்லை, ஆனால் உலக கிரிக்கெட்டுக்கு வெஸ்ட் இண்டீஸ் தேவை என்று கூறி தனது பேச்சை கம்பீர் முடித்தார்.

Story first published: Tuesday, October 14, 2025, 23:58 [IST]
Other articles published on Oct 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+