Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: நெருப்பு மாதிரி.. 7 ஓவரில் வெஸ்ட் இண்டீஸை அலறவிட்ட முகமது சிராஜ்.. இதுதான்டா பவுலிங்!

அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸிலேயே முகமது சிராஜின் பவுலிங் நெருப்பாக அமைந்துள்ளது. புதிய பந்தில் சிராஜ் வீசிய முதல் ஸ்பெல்லிலேயே 3 விக்கெட்டுகளை கைப்பற்றி வெஸ்ட் இண்டீஸ் அணியின் டாப் ஆர்டரை அலறவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் சிராஜை பாராட்டி வருகின்றனர்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. அகமதாபாத் மைதானத்தில் தொடங்கியுள்ள இந்த டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ராஸ்டன் சேஸ் பேட்டிங்கை தேர்வு செய்துள்ளார். இந்திய அணியின் கேப்டனான பின், சொந்த மண்ணில் சுப்மன் கில் விளையாடும் முதல் டெஸ்ட் போட்டி இதுவாகும்.

Mohammed Siraj is breathing fire

இதனால் இந்திய அணி மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. இதன்பின் வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் கேம்பெல் - தேஜ்நரைன் சந்தர்பால் கூட்டணி தொடக்கம் கொடுத்தது. இந்திய அணி தரப்பில் பும்ரா - சிராஜ் இணை அட்டாக்கை தொடங்கியது. இதில் சிராஜ் வீசிய 4வது ஓவரில் சந்தர்பால் விக்கெட் கீப்பர் ஜுரெலிடம் கேட்ச் கொடுத்து டக் அவுட்டாகி வெளியேறினார்.

தொடர்ந்து வந்த பிரண்டன் கிங் சிராஜ் வீசிய இன்ஸ்விங்கரை கணிக்காமல், பேட்டை எடுக்க, அது மிடில் ஸ்டம்பை பதம் பார்த்தது. டெஸ்ட் கிரிக்கெட்டின் கிளாசிக் விக்கெட்டை போல் அமைந்தது. இதன்பின் அதனேஸ் மீண்டும் சிராஜ் பந்தை கவர்ஸ் திசையில் பவுண்டரி அடிக்க முயற்சிக்க, அது நேராக ஸ்லிப்பில் நின்றிருந்த கேஎல் ராகுல் கைகளில் விழுந்தது.

இதனால் அவர் 12 ரன்களில் ஆட்டமிழந்து வெளியேறினார். சிராஜ் கூடுதலாக வீசிய ஒவ்வொரு ஓவரிலும் ஒவ்வொரு விக்கெட்டை எடுத்து ஆச்சரியம் கொடுத்துக் கொண்டே இருந்தார். இதனால் வெஸ்ட் இண்டீஸ் அணி 42 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. சிறப்பாக பவுலிங் செய்த முகமது சிராஜ் 7 ஓவர்களில் 19 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்து 3 மெய்டன் உட்பட 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இங்கிலாந்து டெஸ்ட் தொடரை இந்திய அணி சமன் செய்வதற்கு முக்கியக் காரணமாக இருந்தவர் சிராஜ். பும்ரா இல்லாத போட்டிகளில் சிராஜ் பவுலிங் செய்த விதம் பலரையும் வியப்பில் ஆழ்த்தியது. மொத்தமாக 23 விக்கெட்டுகளை கைப்பற்றினார். என்னதான் வெளிநாடுகளில் சிராஜ் அசத்தினாலும், உள்நாட்டில் சிராஜின் பவுலிங் கொஞ்சம் சொதப்பி கொண்டே இருந்தது.

தற்போது மிகச்சிறந்த ஃபார்மில் இருப்பதால், சிராஜ் சொந்த மண்ணிலும் அசத்தி வருகிறார். அதற்கான தொடக்கமாக வெஸ்ட் இண்டீஸ் முதல் டெஸ்ட் போட்டி அமைந்துள்ளதாக பார்க்கப்படுகிறது. இந்த ஃபார்மை பயன்படுத்தி முகமது சிராஜ் சொந்த மண்ணிலும் ஒரே இன்னிங்ஸில் 5 விக்கெட்டுகளை வீழ்த்த வேண்டும் என்று ரசிகர்கள் பலரும் அறிவுறுத்தி வருகின்றனர்.

Story first published: Thursday, October 2, 2025, 11:15 [IST]
Other articles published on Oct 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+