Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெஸ்ட் இண்டீஸ் டெஸ்ட் தொடர்.. 15 பேர் கொண்ட இந்திய அணி அறிவிப்பு.. கருண் நாயர் நீக்கம்.. யாருக்கு வாய்ப்பு?

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அணியில் காயம் காரணமாக ரிஷப் பண்ட் ஓய்வில் இருக்கும் நிலையில், தமிழக வீரர் ஜெகதீசன் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் கருண் நாயர் நீக்கப்பட்டு, அவரது இடத்திற்கு தேவ்தத் படிக்கல் கொண்டு வரப்பட்டுள்ளார். அதுமட்டுமல்லாமல் ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவுக்கு துணைக் கேப்டன் பொறுப்பு அளிக்கப்பட்டுள்ளது.

இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் வெஸ்ட் இண்டீஸ் அணி 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்க உள்ளது. அக்டோபர் 2 முதல் 6 வரை முதல் டெஸ்ட் போட்டி அகமதாபாத் மைதானத்திலும், அக்டோபர் 10 முதல் 14 வரை 2வது டெஸ்ட் போட்டி டெல்லி மைதானத்திலும் நடக்க உள்ளது. இதற்கான இந்திய அணியை அஜித் அகர்கர் தலைமையிலான தேர்வுக் குழு அறிவித்துள்ளது.

Indian Squad for the West Indies Test Series

சுப்மன் கில் தலைமையிலான இந்திய அணியில் காயம் காரணமாக ரிஷப் பண்ட்க்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது. இதனால் முதன்மை விக்கெட் கீப்பராக துருவ் ஜுரெல் சேர்க்கப்பட்டுள்ளார். மாற்று விக்கெட் கீப்பராக தமிழக வீரர் ஜெகதீசன் சேர்க்கப்பட்டுள்ளார். அதேபோல் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பு அளிக்கப்பட்ட கருண் நாயர் பெரியளவில் சோபிக்காததால், அவர் நீக்கப்பட்டுள்ளார்.

அவரது இடத்தில் தேவ்தத் படிக்கல் கொண்டு வரப்பட்டிருக்கிறார். அதேபோல் இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் சிறப்பாக செயல்பட்ட வேகப்பந்துவீச்சாளரான ஆகாஷ் தீப் நீக்கப்பட்டு, ஸ்பின்னரான அக்சர் படேல் கொண்டு வரப்பட்டிருக்கிறார். அதேபோல் ஆல்ரவுண்டர் ஷர்துல் தாக்கூர் நீக்கப்பட்டுள்ளார். ரிஷப் பண்ட்-ன் துணைக் கேப்டன் பொறுப்பு ரவீந்திர ஜடேஜாவுக்கு அளிக்கப்பட்டுள்ளது.

இந்த அணியில் பேட்ஸ்மேன்களாக சுப்மன் கில், யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், தேவ்தத் படிக்கல் ஆகியோர் சேர்க்கப்பட்டுள்ளனர். ஆல்ரவுண்டர்களாக ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், நிதீஷ் குமார் ரெட்டி ஆகிய மூவரும் சேர்க்கப்பட்டுள்ளனர். விக்கெட் கீப்பர்களாக துருவ் ஜுரெல் மற்றும் ஜெகதீசன் ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அதேபோல் வேகப்பந்துவீச்சாளர்களாக பும்ரா, முகமது சிராஜ், பிரசித் கிருஷ்ணா ஆகியோரும், ஸ்பின்னராக குல்தீப் யாதவும் சேர்க்கப்பட்டுள்ளனர். சொந்த மண்ணில் நடக்கும் டெஸ்ட் தொடர் என்பதால் 4 ஸ்பின்னர்கள் இடம்பெற்றுள்ளனர். இந்த அணியில் சர்ஃபராஸ் கான், முகமது ஷமி ஆகியோரின் பெயர்கள் இடம்பெறவில்லை.

இந்திய அணி விவரம்: சுப்மன் கில் (கேப்டன்), யஷஸ்வி ஜெய்ஸ்வால், கேஎல் ராகுல், சாய் சுதர்சன், துருவ் ஜுரெல், ரவீந்திர ஜடேஜா (துணைக் கேப்டன்), வாஷிங்டன் சுந்தர், அக்சர் படேல், ஜெகதீசன், ஜஸ்பிரிட் பும்ரா, குல்தீப் யாதவ், முகமது சிராஜ், நிதீஷ் குமார் ரெட்டி, பிரசித் கிருஷ்ணா.

Story first published: Thursday, September 25, 2025, 12:53 [IST]
Other articles published on Sep 25, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+