IND vs WI: இசான் கிஷன் மிரட்டல்.. மைதானத்தை விட்டு வெளியே சென்ற பந்து..10 பந்தில் 30 ரன்கள் குவிப்பு
பெங்களூரு: இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான 5-வது மற்றும் கடைசி டி20 போட்டி பெங்களூரு சின்னசுவாமி மைதானத்தில் நடைபெற்றது. மழை காரணமாக ஆட்டம் தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டதால், போட்டி தலா 9 ஓவர்களாகக் குறைக்கப்பட்டது.
போட்டிக்கான டாஸை வென்ற மேற்கிந்திய தீவுகள் அணியின் கேப்டன் ஷாய் ஹோப் முதலில் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இந்திய அணியில் இரு மாற்றங்கள் செய்யப்பட்டன. நிதீஷ் குமார் ரெட்டிக்கு பதிலாக சிவம் துபேவும், மயங்க் யாதவுக்கு பதிலாக புவனேஸ்வர் குமாரும் பிளேயிங் லெவனில் சேர்க்கப்பட்டனர்.

மேற்கிந்திய தீவுகள் அணி எவ்வித மாற்றமும் இன்றி முந்தைய போட்டியில் விளையாடிய அதே வீரர்களுடன் களமிறங்கியது. இந்திய அணியின் தொடக்க வீரர்களாக சஞ்சு சாம்சன் மற்றும் அபிஷேக் சர்மா களமிறங்கினர். கீமோ பால் வீசிய முதல் ஓவரில் அபிஷேக் சர்மா ஒரு சிக்ஸர் அடித்த நிலையில், 6 ரன்களில் ஷமார் ஜோசப்பிடம் கேட்ச் கொடுத்து ஆட்டமிழந்தார்.
தொடர்ந்து 3-வது வீரராகக் களமிறங்கிய இஷான் கிஷன், ரொமாரியோ ஷெப்பர்ட் வீசிய ஓவரில் சிக்ஸர் மற்றும் பவுண்டரிகளை விளாசி அதிரடி காட்டினார். ரொமாரியோ வீசப்போகும் பந்தை முன்பே கணித்து பளார் என்ற ஒரு சிக்சர் அடிக்க அந்த பந்து மைதானத்தை விட்டு வெளியே சென்றது. இந்த ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடிய இசான் கிஷன் 2 சிக்சர், 2 பவுண்டரிகள் விளாசினார். இந்த ஓவரில் மட்டும் 26 ரன்கள் சென்றது. தொடர்ந்து இசான் கிஷன் அதிரடி காட்ட முயன்றார்.
3வது ஓவரில் அவர் அடித்த பந்து கேட்ச் ஆனது. இதனால் இசான் கிஷன் 10 பந்துகளில் 30 ரன்களை விளாசி ஆட்டமிழக்க, இந்திய அணி 2.3 ஓவரில் 45 ரன்களுக்கு 2 விக்கெட்டுகளை இழந்து அதிரடி காட்டியது. 9 ஓவரில் 100 ரன்கள் மேல் அடிக்க இந்திய அணி முயற்சி செய்து வருவது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications


