Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: நான் கூட என்னவோ நினைத்தேன்.. வெஸ்ட் இண்டீஸ் வீரர்களை பாராட்டிய குல்தீப்.. மேஜிக் நடக்கும்

துபாய்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி வலுவான நிலையில் இருக்கின்றது. டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் எடுத்திருக்கிறது.

இதனை அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்சில் 248 ரன்கள் பெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸில் அபாரமாக விளையாடுகிறது. மூன்றாவது நாள் ஆட்டநேரம் முடிவில் வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டு விக்கெட் இழப்பிற்கு 173 ரன்கள் எடுத்திருக்கிறனர்.

Kuldeep Yadav

தற்போது வரை 97 ரன்கள் வெஸ்ட் இண்டீஸ் அணி பின்தங்கி இருக்கிறது. இந்த நிலையில் முதல் இன்னிங்ஸ் 5 விக்கெட் வீழ்த்திய குல்தீப் பேசும் போது, நாங்கள் இந்த டெஸ்டில் நல்ல முறையில் ஆரம்பித்தோம். நல்ல திட்டங்களை வகுத்திருந்தோம். ஆனால் ஆடுகளத்தில் வேகம் இல்லை. சரியான லென்த் மற்றும் ஸ்டெம்பை குறி வைத்து பந்து வீசி வருகிறோம்.

முதல் இன்னிங்ஸில் நாங்கள் அபாரமாக செயல்பட்டோம். ஆனால் இரண்டாவது இன்னிங்ஸில் ஹோப் மற்றும் கேம்ப்பேல் ஆகியோர் விளையாடி வருகிறார்கள். ஆடுகளம் தற்போது பேட்டிங்கிற்கு சாதகமாகவும், தோய்வாகவும் இருக்கின்றது. இதனால் பந்து வீச வேண்டும் என்றால் அதிக அளவு சக்தியை பயன்படுத்தி செயல்பட வேண்டும் என்று நினைக்கின்றேன்.

எனவே என்னுடைய கை சுற்றும் வேகத்தை அதிகரிக்க நினைக்கின்றேன். ஆடுகளத்தில் எங்களுக்கு பெரிய அளவு உதவி எதுவும் இல்லை. இதனால் பேட்டர்களை பீட் செய்யும் அளவுக்கு பந்தை வீசவேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கமாக இருக்கின்றது. நான் தற்போது எல்லாம் எந்த மாதிரி பந்து வீசவேண்டும் என்பது குறித்து எல்லாம் யோசிக்கவே இல்லை.

மூன்று விதமான கிரிக்கெட் போட்டிகளிலும் நல்ல முறையில் பந்து வீச வேண்டும் என்பதுதான் என்னுடைய திட்டமாக இருக்கின்றது. 5 விக்கெட்டுகள் வீழ்த்தியது எப்போதும் ஒரு ஸ்பெஷலான விஷயம்தான் களத்தில் எப்போதும் மேஜிக்கை உருவாக்க வேண்டும். 18 மாதங்கள் கழித்து விளையாடுகிறானா இல்லை ஒரு மாதம் கழித்து விளையாடுகிறான் என்பதெல்லாம் எனக்கு முக்கியமில்லை அன்று குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.

Story first published: Sunday, October 12, 2025, 22:34 [IST]
Other articles published on Oct 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+