Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: வெற்றிக்கு பின் ஆடுகளத்தை குறை சொன்ன குல்தீப் பேட்டர்களை போல்ட் ஆக்குவது குஷி என கருத்து

டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணியில் குல்தீப் யாதவ் முதல் இன்னிங்ஸில் ஐந்து விக்கெட்டுகளையும் இரண்டாவது இன்னிங்ஸில் மூன்று விக்கெட்டுகளையும் வீழ்த்தி அசத்தியுள்ளார். இதன் மூலம் ஆட்டநாயகன் விருதை அவர் கைப்பற்றியுள்ளார்.

கடந்த இங்கிலாந்துக்கு எதிரான ஐந்து போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் ஒரு முறை கூட போட்டியில் பங்கேற்காத குல்தீப் யாதவ் ஆசிய கோப்பை தொடரிலிருந்து அபாரமாக செயல்பட்டு வருகிறார். அந்த தொடரில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி தமது திறமையை நிரூபித்து இருக்கிறார்.

Kuldeep Yadav

மூலம் தற்போது டெஸ்ட் அணியிலும் அவருக்கு இடம் கிடைத்திருந்தது தமக்கு கிடைத்த வாய்ப்பை சிறப்பாக பயன்படுத்திக் கொண்டு அசத்தியுள்ளார் எனினும் முதல் டெஸ்ட் போட்டியில் மொத்தமாக 4 விக்கெட் வீழ்த்திய அவர் அகமதாபாத்தில் வழங்கப்பட்ட ஆடுகளத்திற்கும் தற்போது அமைக்கப்பட்டுள்ள ஆடுகளத்திற்கும் பல வித்தியாசம் இருப்பதாக அவர் குறை கூறியுள்ளார்.

இது குறித்து பேசிய அவர், "முதல் டெஸ்டில் எங்களுக்கு வழங்கப்பட்ட ஆடுகளத்திற்கும் இதற்கும் நிறையவே வித்தியாசம் இருந்தது. இந்த டெஸ்டில் நாங்கள் அதிக ஓவர்களை வீசி இருக்கிறோம். இது உண்மையிலே ஒரு சவால் தான். இந்த சவாலை நான் மகிழ்ச்சியுடன் எதிர்கொண்டேன். பந்தை திருப்புவதற்கான சூழல் இங்கு எனக்கு கிடைக்கவில்லை."

"ஆடுகளம் மிகவும் காய்ந்த நிலையில் இருந்தது. ஆனால் பெரிய நாள் இடைவெளி இல்லாமல் தொடர்ந்து அடுத்தடுத்து விளையாடுவது என்பது நிச்சயமாகவே மகிழ்ச்சியை தந்தது. இந்த போட்டியில் பந்தில் தாக்கத்தை ஏற்படுத்துவதற்காக என் கையை வேகமாக சுற்றி பந்தை வீசினேன். இதன் மூலம் எனக்கு பந்தை திருப்புவதற்கான சூழலை ஏற்படுத்த முயற்சி செய்தேன்."

"எப்போதுமே பேட்ஸ்மேன்களை போல்டாக்குவது எனக்கு ரொம்பவே குஷியை தரும். தொடர்ந்து கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி வருவதால் கால்பந்து போட்டிகளை பார்க்கவே நேரமில்லை. தற்போது அடுத்த தொடரும் உடனே தொடங்குகிறது. ஜடேஜா என்னுடன் இருப்பது நன்றாக இருக்கிறது. அவர் எப்போதுமே என்னை வழி நடத்துகிறார். நெருக்கடியான காலகட்டத்தில் கூட அவர்தான் எனக்கு குருவாக இருந்தார்" என்று குல்தீப் யாதவ் கூறியுள்ளார்.

Story first published: Tuesday, October 14, 2025, 12:30 [IST]
Other articles published on Oct 14, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+