Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: 5வது விக்கெட் ஏன் எடுக்கல.. உண்மையை சொன்ன முகமது சிராஜ்

அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வேகப்பந்துவீச்சாளர் முகமது சிராஜ் 40 ரன்கள் விட்டுக் கொடுத்து, நான்கு விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதேபோன்று பும்ரா மூன்று விக்கெட்டுகளை வீழ்த்த வெஸ்ட் இண்டீஸ் அணி முதல் இன்னிங்ஸில் 162 ரன்கள் ஆட்டம் இழந்தது.

இந்த நிலையில் இங்கிலாந்து எதிராக சிறப்பாக செயல்பட்ட சிராஜ் இரண்டு மாதம் ஓய்வுக்கு பின் திரும்பிய நிலையில் தற்போது மீண்டும் தனது வழக்கமான பந்துவீச்சை வெளிப்படுத்துகிறார். இந்த நிலையில் செய்தியாளர்ககிடம் பேசிய சிராஜ், நான் இன்று புற்கள் நிறைந்த ஆடுகளத்தில் பந்து வீச மிகவும் ஆர்வமாக இருந்தேன்.

Mohammed siraj

ஏனென்றால் இந்திய ஆடுகளங்களில் எங்களுக்கு இதுபோன்ற சூழல் கிடைக்கவே கிடைக்காது. கடைசியாக இது போன்று ஆடுகளம் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் பெங்களூருவில் இருந்தது. நான் திட்டமிட்டபடி என்னுடைய பந்துவீச்சை செயல்படுத்தினேன். நான் பிராண்டன் கிங் வீசிய பந்து அவருடைய பேரில் பட்டது.

எனவே நான் என்னுடைய பந்தை ஸ்டெம்ப் லைனுக்கு நேராக வீசினேன். நான் எதிர்பார்த்தபடி அந்த விக்கெட் அமைந்தது. இதேபோன்று வோபல் சிம் வகையான பந்தும் கொஞ்சம் கை கொடுத்தது. இங்கிலாந்துக்கு எதிராக கடும் சவால்கள் இருந்த டெஸ்ட் தொடரில் விளையாடிவிட்டு வந்திருக்கிறேன். அதில் நல்ல நம்பிக்கை எனக்கு கிடைத்து இருக்கிறது.

பலமான அணிகளுக்கு எதிராக விளையாடும் போது நல்ல நம்பிக்கை கிடைக்கிறது. இன்றும் நான் அப்படி தான் உணர்ந்தேன். இன்று வேகப்பந்து வீச்சுக்கு சாதகமான ஆடுகளத்தில் பந்து வீசினாலும் நான் நான்கு விக்கெட்டுகளை எடுக்க கடும் உழைப்பை மேற்கொண்டேன். இங்கிலாந்திலும் இதேபோன்று நான் உழைப்பை மேற்கொண்டேன்.

உங்களுக்கு எளிதாக விக்கெட்டுகள் எல்லாம் கிடைக்காது. இன்று கூட எனக்கு ஐந்தாவது விக்கெட் யாரும் சும்மாக தூக்கி கொடுக்கவில்லை. இந்த நான்கையுமே நான் கடின உழைப்பு மூலம்தான் எடுத்தேன் என்று சிராஜ் கூறியுள்ளார்.

Story first published: Thursday, October 2, 2025, 23:59 [IST]
Other articles published on Oct 2, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+