Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: என் வெற்றிக்கு ஐபிஎல் தொடரே காரணம்.. இந்தியாவின் புதிய ஹீரோ நமன்தீர் கருத்து

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக லக்னோவில் நடைபெற்ற டி20 போட்டியில் அறிமுகமாகி அசத்திய மும்பை இந்தியன்ஸ் அணியின் ஆல்-ரவுண்டர் நமன் தீர், ஐபிஎல் தொடரை தனது வெற்றிக்கு காரணமாக கூறியுள்ளார். ஐபிஎல் தொடரில் உலகின் முன்னணி வீரர்களுக்கு எதிராக விளையாடிய அனுபவம் இருப்பதால், தனது அறிமுக சர்வதேச டி20 போட்டியில் தனக்கு பெரிய அளவில் அழுத்தம் எதுவும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

லக்னோவில் நடைபெற்ற முதல் டி20 ஆட்டத்தில், தனது சிறப்பான பந்துவீச்சால் 4 ஓவர்களில் 31 ரன்கள் மட்டுமே கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார் நமன் தீர். இவரது சுழற்பந்து வீச்சில் ஷாய் ஹோப், ரொமாரியோ ஷெப்பர்ட் மற்றும் ஷமார் ஸ்பிரிங்கர் ஆகியோர் ஆட்டமிழந்தனர். இதனால் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 19.1 ஓவர்களில் 171 ரன்களுக்கு ஆல் அவுட் ஆனது.

Naman Dhir

தொடர்ந்து விளையாடிய இந்திய அணி, ஸ்ரேயாஸ் ஐயரின் அதிரடி சதத்தால் 14.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இந்த வெற்றிக்குப் பிறகு நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய நமன் தீர், "ஐபிஎல் தொடரில் விளையாடுவது உங்களை சர்வதேச கிரிக்கெட்டுக்கு தகுதியானவர்களாக மாற்றுகிறது.

IND vs WI: இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே.. நமன் திர் போட்ட போடு.. ஆல்-அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்!

IND vs WI: இது நம்ம லிஸ்ட்லையே இல்லையே.. நமன் திர் போட்ட போடு.. ஆல்-அவுட் ஆன வெஸ்ட் இண்டீஸ்!

அங்கு போட்டித்தன்மை மிகவும் அதிகமாக இருக்கும். அதிலும் குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் போன்ற ஒரு பெரிய அணிக்காக நீங்கள் விளையாடும்போது, மிகப்பெரிய அரங்கில் விளையாடுவதற்கான உலகத்தரம் வாய்ந்த தயாரிப்பை அது உங்களுக்கு வழங்குகிறது. இதனால் சர்வதேச போட்டிகளில் விளையாடும்போது நமக்கு பெரியளவில் அழுத்தம் தெரிவதில்லை. அதைத்தான் நான் இப்போது உணர்கிறேன்" என்றார்.

"ஐபிஎல் தொடரில் நான் இம்பாக்ட் பிளேயராக விளையாடினாலும், வலைப்பயிற்சியில் தொடர்ந்து பந்துவீசி வருகிறேன். இங்கும் அந்த பயிற்சியைத் தொடர்ந்தேன். இரண்டு அல்லது நான்கு ஓவர்கள் வீசுவது எனக்குப் புதிய விஷயம் அல்ல. ஒருநாள் போட்டிகளில் 6 முதல் 7 ஓவர்கள் வரை வீசியிருக்கிறேன். எனது திட்டங்களை சரியாகச் செயல்படுத்த மட்டுமே நான் முயன்றேன்" என்று கூறினார்.

நமன் தீர் இதுவரை மும்பை இந்தியன்ஸ் அணிக்காக 37 ஐபிஎல் போட்டிகளில் விளையாடி 163.97 என்ற ஸ்ட்ரைக் ரேட்டுடன் 710 ரன்கள் குவித்துள்ளார். ஆனால், ஐபிஎல் தொடரில் அவர் இதுவரை விக்கெட்டுகள் எதுவும் கைப்பற்றியதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தனது அறிமுகப் போட்டியிலேயே வெஸ்ட் இண்டீஸ் பேட்டர்களைத் திணறடித்த நமன் தீர், "பவர்பிளேயில் அக்சர் படேல் வீசியதை நான் உன்னிப்பாக கவனித்தேன். அவர் பந்தை மெதுவாக வீசும்போது அது நன்றாக சுழன்று திரும்பியது. நானும் மெதுவாக வீசினால் விக்கெட்டுகளை வீழ்த்த முடியும் என்று நினைத்தேன். எனது அடிப்படை திட்டத்தில் இருந்து மாறாமல் செயல்பட்டதால் எனக்கு இந்த சிறந்த பலன் கிடைத்தது" என்றார்.

IND vs WI: இந்த வீரர் 5 டி20 போட்டியிலும் விளையாட வேண்டும்.. வேகப்பந்துவீச்சு குறித்தும் ஆகாஷ் கருத்து

Also Read

IND vs WI: இந்த வீரர் 5 டி20 போட்டியிலும் விளையாட வேண்டும்.. வேகப்பந்துவீச்சு குறித்தும் ஆகாஷ் கருத்து

இந்த டி20 அறிமுகத்திற்கு முன்பாக, வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரிலும் நமன் தீர் அறிமுகமாகி விளையாடினார். அந்த மூன்று போட்டிகளிலும் விளையாடிய அவர், 30 ரன்கள் குவித்து 1 விக்கெட்டையும் கைப்பற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Wednesday, October 7, 2026, 7:42 [IST]
Other articles published on Oct 7, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+