For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs WI அச்சுறுத்தும் கொரோனா! பி.சி.சி.ஐ. எடுத்த அதிரடி முடிவு.. இங்கிலாந்து பாணியில் புது பிளான்

அகமதாபாத்: இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி வரும் 6ஆம் தேதி தொடங்குகிறது.

இந்த நிலையில், வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. இதில் ஷிகர் தவான், ருத்துராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோருக்கு கொரோனா பாதிப்பு எறபட்டது.

இதே போன்று அணியின் பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்ற இருவருக்கும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் மாற்று வீரராக மாயங் அகர்வால் சேர்க்கப்பட்டார்.

பி.சி.சி.ஐ. ஆலோசனை

பி.சி.சி.ஐ. ஆலோசனை

இந்த நிலையில், இந்திய அணியில் மேலும் சிலருக்கு கொரோனா ஏற்பட்டதாக செய்திகள் வெளியானது. ஆனால் அதில் உண்மை இல்லை என்று பி.சி.சி.ஐ வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இதனால் தொடரை எப்படி நடத்துவது என்று குறித்து பி.சி.சி.ஐ. அவசர ஆலோசனையில் ஈடுபட்டது.

முக்கிய முடிவு

முக்கிய முடிவு

இதில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளன. மற்ற வீரர்களுக்கு யாரும் கொரோனா ஏற்படவில்லை என்பதால் போட்டியை திட்டமிட்டு நடத்துவது என்று பி.சி.சி.ஐ. திட்டமிட்டுள்ளது. தேவைப்பட்டால் போட்டியை 2 நாட்களுக்கு ஒத்திவைக்கப்படலாம் என்றும் ஆலோசனையில் முடிவு எடுக்கப்பட்டது.

தயாராக இருங்க

தயாராக இருங்க

மேலும் சுப்மான் கில், இஷான் கிஷன், குர்னல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, ஷாரூக்கான், பிரித்வி ஷா, சேத்தன் சுக்ரியா ஆகியோரை தயாராக இருக்கும் படி பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியுள்ளது. தற்போது மேற்கிந்திய தீவுகள் அணி 15 வீரர்களை மட்டுமே அனுப்பியுள்ளது. இதனால் கூடுதல் வீரர்களை அனுப்பும்மாறு அந்நாட்டு கிரிக்கெட் வாரியத்திடம் பி.சி.சி.ஐ. கோரிக்கை விடுத்துள்ளது.

புதிய அணி

புதிய அணி

கடந்த முறை, இலங்கைக்கு எதிரான ஒருநாள் தொடரின் போது இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டது. அப்போது போட்டியை ரத்து செய்யாமல் முற்றிலும் புதிய அணியை இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் அறிவித்தது. தற்போது அதே போன்ற சூழல் ஏற்பட்டால் புதிய அணியை களமிறக்க பி.சி.சி.ஐ. அதிரடி முடிவை எடுத்துள்ளது.

Story first published: Thursday, February 3, 2022, 22:15 [IST]
Other articles published on Feb 3, 2022
English summary
Ind vs WI odi series- BCCI Plans to select stand by team IND vs WI அச்சுறுத்தும் கொரோனா! பி.சி.சி.ஐ. எடுத்த அதிரடி முடிவு.. இங்கிலாந்து பாணியில் புது பிளான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+