Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கொரோனா இருந்தாலும் பிரச்சினை இல்லை..! கிரீன் சிக்னல் அளித்த பி.சி.சி.ஐ..! மாற்று வீரர் அறிவிப்பு..

அகமதாபாத்: இந்தியா, மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் போட்டி வரும் 6ஆம் தேதி தொடங்குகிறது.

Recommended Video

India வீரர்களுக்கு கொரோனா பரவ BCCI காரணம்? விளாசும் ரசிகர்கள் | Oneindia Tamil

இதற்காக இரு அணி வீரர்களும் பயோ பபுள் முறைக்குள் வந்தனர். இந்திய அணி வீரர்கள் பயிற்சியை இன்று தொடங்க இருந்தனர்.

அதற்கு முன்பு இந்திய அணி வீரர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. இதன் முடிவுகள் ரசிகர்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கொரோனா பாதிப்பு

கொரோனா பாதிப்பு

இந்திய அணியின் நட்சத்திர வீரர்களான ஷிகர் தவான்,ருத்துராஜ் கெய்க்வாட், ஸ்ரேயாஸ் ஐயர், மாற்று வீரராக அறிவிக்கப்பட்ட நவதீப் சைனி ஆகியோருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக முடிவுகள் வந்துள்ளன.ஆனால் வீரர்கள் அனைவருக்கும் அறிகுறி தெரியவில்லை. இதனையடுத்து 4 பேரும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

பாதிப்பு இல்லை

பாதிப்பு இல்லை

இந்திய அணி பயிற்சியாளர் குழுவில் இடம்பெற்ற இருவருக்கும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.இதனால் மேற்கிந்திய தீவுகள் தொடர் ஒத்திவைக்கப்படும் என தகவல் வெளியானது. ஆனால் மற்ற வீரர்கள் அனைவருக்கும் நெகட்டிவ் என்ற முடிவு வந்துள்ளது.

மாயங் அகர்வால்

மாயங் அகர்வால்

இதனால் 18 பேர் கொண்ட அணியில் 15 பேர் நல்ல உடல் தகுதியுடன் உள்ளனர். தற்போது மாற்று வீரராக மாயங் அகர்வால் அறிவிக்கப்பட்டுள்ளார். இதன் மூலம் மேற்கிந்திய தீவுகள் திட்டமிட்ட படி நடைபெறும் என்று தெளிவாகியுள்ளது. போட்டிகள் இந்தியாவில் நடைபெறுவதால், மாற்று வீரர்களை தயார் செய்வதில் பி.சி.சி.ஐ.க்கு எவ்வித சிக்கலும் இருக்காது.

தயாராக இருங்கள்

தயாராக இருங்கள்

மேலும் மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடர் ஒத்திவைக்கப்பட்டால், அதனை மீண்டும் நடத்த பி.சி.சி.ஐ. அட்டவணையில் இடமே இருக்காது. மேலும் இந்தியாவில் சர்வதேச போட்டிகளை நடத்தி 11 மாதங்கள் ஆகிறது. இதனால் இனிமேல் கொரோனாவுக்கு அச்சப்பட முடியாது என்ற முடிவை பி.சி.சி.ஐ. எடுத்துள்ளது. மேலும் சுப்மான் கில், இஷான் கிஷன், குர்னல் பாண்டியா, ஹர்திக் பாண்டியா, ஷாரூக்கான், பிரித்வி ஷா, சேத்தன் சுக்ரியா ஆகியோரை தயாராக இருக்கும் படி பி.சி.சி.ஐ. அறிவுறுத்தியுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Story first published: Thursday, February 3, 2022, 7:06 [IST]
Other articles published on Feb 3, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+