Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: துருவ் ஜூரல் சதத்தால் 2 பேருக்கு ஆபத்து.. எச்சரிக்கை தந்த முன்னாள் தமிழக வீரர்

மும்பை: இந்திய டெஸ்ட் அணியில் புஜாராவுக்குப் பிறகு நம்பர் மூன்றாவது இடத்தில் ஒரு நிலையான வீரரே இல்லை. கில், அந்த இடத்தில் களம் இறங்கி ஆரம்பத்தில் தடுமாறினாலும் பின்னர் சொந்த மண்ணில் மூன்றாம் இடத்தில் ரன்களை அடித்தார்.

எனினும் அவர் கேப்டன் பதவியை ஏற்ற பின்பு அவர் நான்காவது வீரராக டெஸ்ட் அணியில் விளையாடுகிறார். இதனால் மூன்றாவது இடத்திற்கு பல்வேறு வீரர்கள் தங்களது ஆடிஷனை செலுத்தினார்கள். இதில் குறிப்பாக சாய் சுதர்சனுக்கு நிலையான ஒரு வாய்ப்பு கிடைத்தது.

Dhruv Jurel

ஆனால் அதில் பெரிய அளவு அவர் தாக்கத்தை ஏற்படுத்தவில்லை. இந்த நிலையில் இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் சடகோபன் ரமேஷ், ரிஷப் பன்ட் டெஸ்ட் அணிக்கு திரும்பினார் என்றால் துருவ் ஜூரல் வெறும் பேட்ஸ்மேனாக அணியில் விளையாட வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து பேசிய அவர் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக துருவ் ஜூரல் சிறப்பான ஒரு ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அது ஒரு பலம் குன்றிய அணிக்கு எதிராக இருந்தாலும், கடும் நெருக்கடி அவருக்கு ஏற்பட்டிருந்தது. ஏனென்றால் பண்ட் போன்ற ஒரு வீரரின் இடத்திற்கு அவர் போராடுகிறார்.

தற்போது அவர் டெஸ்டில் சதம் அடித்திருக்கிறார். இதன் மூலம் ரிஷப் பண்ட்க்கும் தனக்கும் போட்டி கிடையாது. மற்ற இடத்தில் விளையாடும் பேட்ஸ்மேனுக்கும் தனக்கும் தான் போட்டியே என்பதை அணி நிர்வாகத்துடன் சொல்லாமல் சொல்லிவிட்டார். தற்போது துருவ் ஜூரல் அபாரமாக விளையாடி இருப்பதன் மூலம் மூன்றாவது இடத்தில் களமிறங்கும் சாய் சுதர்சனுக்கு இல்லை நடுவரிசையில் விளையாடும் நிதீஷ் குமார் ரெட்டி இடத்திற்கும் ஆபத்து ஏற்பட்டு இருக்கிறது.

தமக்கு கிடைத்த வாய்ப்பை சாய் சுதர்சன் சிறப்பாக பயன்படுத்திக் கொள்ளவில்லை என்றால் பந்த் திரும்பியவுடன் துருவ் ஜூரல் அந்த இடத்தில் விளையாடுவார். இதுவரை டெஸ்ட் கிரிக்கெட்டில் 6 இன்னிங்ஸ் விளையாடி மொத்தமாக 350 ரன்கள் அடித்திருக்கிறார். இதில் வெஸ்ட் இண்டீஸ்க்கு எதிராக அண்மையில் 210 பந்துகளை எதிர் கொண்டு 125 ரன்கள் சேர்த்தார் இதில் 15 பவுண்டரி, மூன்று சிக்சர்கள் அடங்கும். அதுமட்டுமில்லாமல் விக்கெட் கீப்பிங் பணியில் துருவ் ஜுரல் அபாரமாக செயல்பட்டார். இரண்டாவது டெஸ்ட் போட்டி வரும் வெள்ளிக்கிழமை தொடங்குகிறது.

Story first published: Monday, October 6, 2025, 22:49 [IST]
Other articles published on Oct 6, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+