Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சாய் சுதர்சன் பிடித்த கேட்ச்.. என்ன நடந்துச்சு.. ஷாக்கான ஜான் கேம்பெல்.. மோர்க்கல் கொடுத்த ரியாக்சன்

டெல்லி: வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர் ஜான் கேம்பெல் அடித்த ஷாட்டை கண்ணை மூடிக் கொண்டு சாய் சுதர்சன் கேட்ச் பிடித்தது வியப்பை ஏற்படுத்தியுள்ளது. ஒரு நிமிடம் என்ன நடந்தது என்றே புரியாமல் ஜான் கேம்பெல் களத்தில் நிற்க, வர்ணனையாளர்கள், இந்திய அணியின் பயிற்சியாளர்கள் அனைவரும் கொடுத்த ரியாக்சன் ட்ரெண்டாகி வருகிறது.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்த போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 518 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 175 ரன்களையும், சுப்மன் கில் 129 ரன்களையும், சாய் சுதர்சன் 87 ரன்களையும் குவித்தனர். வெஸ்ட் இண்டீஸ் அணி தரப்பில் வாரிக்கன் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

Sai Sudharsan took a Freaking Catch

இதையடுத்து வெஸ்ட் அணி தரப்பில் ஜான் கேம்பெல் - சந்தர்பால் இருவரும் தொடக்கம் கொடுத்தது. பும்ரா மற்றும் சிராஜ் ஆகிய இருவரும் அட்டாக்கை தொடங்கிய நிலையில், ஜான் கேம்பெல் நிலையான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதனால் திடீரென கேப்டன் சுப்மன் கில், ஸ்பின்னரான ஜடேஜாவுக்கு 8வது ஓவரை கொடுத்தார்.

அந்த ஓவரின் 2வது பந்தை ஜடேஜா கொஞ்சம் லெந்தை இழுத்து வீச, ஜான் கேம்பெல் அசால்ட்டாக ஸ்வீப் ஷாட் அடித்தார். அவர் அடித்த வேகத்திற்கு பந்து பவுண்டரிக்கு சென்றிருக்க வேண்டும். ஆனால் பந்து நேராக ஷார்ட் லெக் திசையில் ஃபீல்டிங் நின்றிருந்த சாய் சுதர்சனின் முகத்திற்கு சென்றது. இதனால் கண்களை மூடிக் கொண்டு முகத்தை மறைத்த சாய் சுதர்சனின் ஹெல்மெட்டில் பந்து அடித்தது.

அதன்பின் கொஞ்சம் கீழ இறங்கிய போது கைகளில் சிக்கியது. அதனை கைகளில் பத்திரமாக சாய் சுதர்சன் வைத்துக் கொண்டார். சென்னை 28 படத்தில் சொல்வதை போல், அவர் பந்தைப் பிடிக்கவில்லை.. பந்துதான் அவரை பிடித்தது என்றும் கூறலாம். இதனால் ஒரு நிமிடம் என்ன நடந்தது என்றே பேட்ஸ்மேன்கள், சக வீரர்கள், வர்ணனையாளர்கள், ஓய்வறையில் இருந்த இந்திய அணி நிர்வாகிகள் யாருக்கும் புரியவில்லை.

அருகில் நின்றிருந்த விக்கெட் கீப்பர் துருவ் ஜுரெல் கூட 2 நொடிகள் தாமதமாகவே ரியாக்சன் கொடுத்தார். ஜான் கேம்பெல் என்ன நடந்தது என்று புரியாமல் க்ரீஸில் அதிர்ச்சியடைந்து நின்றார். மறுபக்கம் வர்ணனையாளர்கள் ஒரு நிமிடம் ஸ்டன்னாகி பார்க்க, மறுபக்கம் பவுலிங் பயிற்சியாளர் மோர்னே மோர்க்கல் முழித்து கொண்டு பின்னர் கேட்ச் பிடித்ததை நினைத்து சிரிக்க தொடங்கினார். இதன் வீடியோ ட்ரெண்டாகி வருகிறது.

Story first published: Saturday, October 11, 2025, 15:57 [IST]
Other articles published on Oct 11, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+