Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: தென்னாப்பிரிக்காவுக்கு நன்றி சொல்லனும்.. அவர்களால் தான் சாம்சன் அணிக்குள் வந்தார்- கையிப்

கொல்கத்தா: டி20 உலககோப்பையில் சூப்பர் 8 சுற்றில் வாழ்வா சாவா என்ற ஆட்டத்தில் இந்திய அணி வெற்றி பெற்றது. மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிராக சஞ்சு சாம்சன் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் குவித்து இந்திய அணியை அரையிறுதிக்குஅழைத்து சென்றார். இது குறித்து கருத்து தெரிவித்துள்ள முன்னாள் வீரர் முகமது கையிப், தென் ஆப்பிரிக்காவிடம் 76 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த இந்திய அணி நிர்வாகம், அதன் பின் தான் தங்களுடைய யுத்திகளை மறுபரிசீலனை செய்ததாக கூறினார்.

இதன் விளைவாக, சஞ்சு சாம்சன் அணிக்குள் கொண்டுவரப்பட்டார். இது உலகக் கோப்பையில் ஒரு மிகப்பெரிய வெற்றியாக மாறியது. சாம்சனுக்கு வாய்ப்பு அளித்தது முக்கியமான ஒன்று என முகமது கைஃப் சுட்டிக் காட்டினார்.அரையிறுதிக்குள் நுழைய 196 ரன்கள் தேவை என்ற நிலையில், சஞ்சு சாம்சன் 50 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 97 ரன்கள் எடுத்து இந்தியாவை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெறச் செய்தார்.

இதில் 12 பவுண்டரிகளும் 4 சிக்ஸர்களும் அடங்கும். இது குறித்து பேசிய கையிப், "அன்று சாம்சனை அணிக்கு எடுப்பது முக்கியமான ஒன்றாக இருந்தது. அதன் பிறகு உருவானதுதான் இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க இன்னிங்ஸ் ஆகும். இதற்காக தென்னாப்பிரிக்காவுக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும். உலகக் கோப்பை வரலாற்றில் 195 ரன்கள் இலக்கு இந்திய அணியால் இதற்கு முன் ஒருபோதும் வெற்றிகரமாகத் துரத்தப்பட்டதில்லை" என்று கைஃப் தெரிவித்தார்.

"முதல் எட்டு பேட்ஸ்மேன்களில் ஆறு இடதுகை பேட்ஸ்மேன்கள் இருந்த நிலையில், சஞ்சு சாம்சனுக்கு ஒரு வாய்ப்பு கொடுக்கப்பட வேண்டும் என்று நாங்கள் உணர்ந்தோம். அவர் ஏன் இதற்குத் தகுதியானவர் என்று நான் சொல்கிறேன்? ஏனெனில் உள்ளூர் டி20 கிரிக்கெட்டில் அவர் 8,000 ரன்களுக்கு மேல் எடுத்துள்ளார். பல வருடங்களாக இந்த வடிவத்தில் விளையாடி ரன்கள் குவித்துள்ளார்."

"இங்கும் பாருங்கள், அவர் எவ்வளவு அமைதியாக இருந்தார்" என்று வியந்தார். தேவையான ரன்ரேட் 10 ஆக இருந்தபோதிலும், அவர் பவுண்டரிகளை அமைதியாக அடித்து, எந்தவித பதட்டமும் இல்லாமல் சிறப்பாக ஆடினார். மேற்கு இந்தியத் தீவுகளுக்கு எதிரான இந்தப் போட்டியில் முதல் பந்தில் இருந்து கடைசி வரை சாம்சன் முழு கட்டுப்பாட்டுடன், தன் ஆற்றலை வெளிப்படுத்தியதாக முகமது கைஃப் குறிப்பிட்டார். இந்தியா தனது அடுத்த அரையிறுதிப் போட்டியில் வியாழக்கிழமை அன்று மும்பையில் இங்கிலாந்தை எதிர்கொள்ளவுள்ளது.

Story first published: Monday, March 2, 2026, 17:01 [IST]
Other articles published on Mar 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+