Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: 25 ஃபோர், 13 சிக்ஸ்.. மிரள வைத்த இந்திய ஆட்டம்.. துவண்டு போன வெஸ்ட் இண்டீஸ்!

ராஞ்சி: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியில் இந்திய வீரர்கள் சரமாரியாக 25 பவுண்டரி, 13 சிக்ஸர்கள் அடித்து 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 249 ரன்கள் குவித்தனர். ராஞ்சியில் உள்ள சர்வதேச மைதானத்தில் நடைபெற்ற இப்போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்துவீச்சைத் தேர்வு செய்தது. அதன்படி முதலில் பேட்டிங் செய்ய களமிறங்கியது இந்திய அணி.

தொடக்க ஆட்டக்காரர் அபிஷேக் சர்மா 12 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். ஆனால் மறுமுனையில் நின்ற சஞ்சு சாம்சன் அதிரடி ஆட்டம் ஆடி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை துவம்சம் செய்தார். பவர்பிளே ஓவர்களில் சாம்சன் காட்டிய அதிரடியால் முதல் 6 ஓவர்களிலேயே இந்திய அணி 79 ரன்களைக் குவித்தது.

IND vs WI Sanju Samson And Tilak Varma Shine As India Post Massive 249-Run Target Against West Indies In 2nd T20I

தொடர்ந்து இஷான் கிஷனுடன் ஜோடி சேர்ந்த சஞ்சு சாம்சன், 2-வது விக்கெட்டுக்கு வெறும் 43 பந்துகளில் 97 ரன்கள் சேர்த்து மிரட்டினார். அபாரமாக ஆடிய சஞ்சு சாம்சன் 41 பந்துகளில் 9 பவுண்டரிகள், 4 சிக்சர்களுடன் 82 ரன்கள் விளாசினார். இஷான் கிஷன் 22 பந்துகளில் 43 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். நடுவரிசையில் களமிறங்கிய சிவம் துபே 7 ரன்களில் ஆட்டமிழந்து ஏமாற்றினார்.

இறுதி ஓவர்களில் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் திலக் வர்மா ஜோடி வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சை நாலாபுறமும் சிதறடித்தது. இந்த ஜோடி 5-வது விக்கெட்டுக்கு வெறும் 32 பந்துகளில் 83 ரன்களைக் குவித்தது. கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 18 பந்துகளில் 40 ரன்கள் எடுக்க, இறுதிவரை ஆட்டமிழக்காத திலக் வர்மா 18 பந்துகளில் 44 ரன்கள் விளாசினார்.

நீ மனுஷனே இல்லை.. 42 வயதில் அதிவேக செஞ்சுரி.. ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த ஏபி டி வில்லியர்ஸ்

நீ மனுஷனே இல்லை.. 42 வயதில் அதிவேக செஞ்சுரி.. ஆஸ்திரேலியாவை துவம்சம் செய்த ஏபி டி வில்லியர்ஸ்

வெஸ்ட் இண்டீஸ் தரப்பில் ரோஸ்டன் சேஸ் 24 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார். ஷமர் ஸ்பிரிங்கர் 4 ஓவர்களில் 64 ரன்களை வாரி வழங்கினார். இறுதியில் இந்திய அணி 20 ஓவர்களில் 249 ரன்கள் குவித்தது. இதையடுத்து 250 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்குடன் வெஸ்ட் இண்டீஸ் அணி களமிறங்கியது.

Story first published: Friday, October 9, 2026, 21:03 [IST]
Other articles published on Oct 9, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+