Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: கர்த்தருக்கு நன்றி! அரைசதம் அடித்த உடன் சஞ்சு சாம்சன் செய்த செயல்.. எழுந்து நின்ற ரசிகர்கள்

கொல்கத்தா: டி20 உலக கோப்பை சூப்பர் 8 சுற்றில் வாழ்வா சாவா என்ற ஆட்டத்தில் வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிராக இந்திய அணியின் நட்சத்திர வீரர் சஞ்சு சாம்சன் அரை சதம் அடித்துள்ளார். கொல்கத்தாவில் நடைபெற்று வரும் இந்த போட்டி ஒரு காலிறுதி போட்டி போல் நடைபெற்று வருகிறது.

இதில் வெல்லும் அணி அரையிறுதிக்கு செல்லும், தோல்வி அடையும் அணி தொடரை விட்டு வெளியேறும். இந்த சூழலில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதன் அடுத்து களமிறங்கிய வெஸ்ட் இண்டீஸ் அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கட் இழப்பிற்கு 195 ரன்கள் எடுத்திருந்தது.

196 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி தற்போது விளையாடி வருகிறது. பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் ஷர்மா 11 பந்துகளில் வெறும் இரண்டு பவுண்டரிகள் அடித்து 10 ரன்களில் ஆட்டம் இழந்தார். அதேபோன்று இஷான் கிஷன் 6 பந்துகளை எதிர் கொண்டு இரண்டு பவுண்டர்களை அடித்து 10 ரன்களில் திரும்பினார்.

இருவரும் அடுத்தடுத்து ஆட்டம் இழக்க, மற்றொரு தொடக்க வீரராக களமிறங்கிய சஞ்சு சாம்சன் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அதிரடி காட்டினார். ஆரம்ப கட்டத்தில் சுழற்பந்துவீச்சாளருக்கு அபிஷேக் பந்துவீச்சாளருக்கு எதிராக தடுமாறிய நிலையில் சஞ்சு சாம்சன் மட்டும் தனி ஆளாக அதிரடி காட்டினார். ஒரு கட்டத்தில் இந்திய அணி 41 ரன்களுக்கு இரண்டு விக்கெட்டுகளை இழந்து தடுமாறிய நிலையில், கேப்டன் சூரியகுமார் ஆதரவுடன் ஜோடி சேர்ந்த சாம்சன் இந்திய அணியை கரை சேர்க்க முயற்சி செய்தார்.

இருவரும் ஜோடி சேர்ந்து 58 ரன்களை மூன்றாவது விக்கெட்டுக்கு சேர்த்தனர். தடுக்க வேண்டிய பந்துகளை பொறுமையாகவும், அடிக்க வேண்டிய பந்துகளை அதிரடியாகவும் அடித்து சஞ்சு சாம்சன் ரன்களை சேர்த்தார். இதன் மூலம் சாம்சன் 26 பந்துகளில் தன்னுடைய அரை சதத்தை கடந்தார். இதில் ஆறு பவுண்டர்களும், மூன்று சிக்ஸர்களும் அடங்கும். டி20 உலக கோப்பை வரலாற்றில் சாம்சன் அடித்திருக்கும் முதல் அரை சதம் இதுவாகும்.

அரை சதம் கடந்த உடன் கர்த்தருக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக கையால் சிலுவை போட்டுக் கொண்டு அடுத்த பந்தை எதிர்நோக்க சென்று விட்டார். முக்கியமான போட்டியில் இஷான் கிஷன், அபிஷேக்சர்மா காலை வாரிய நிலையில் சஞ்சு சாம்சன் மட்டும் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருவது ரசிகர்களை மகிழ்ச்சியடைய செய்திருக்கிறது. கடந்த சில போட்டிகளாக சாம்சன் அதிரடியாக விளையாடினாலும் பெரிய ஸ்கோர் ஆக மாற்றுவதில்லை என்று ரசிகர்கள் குறை கூறிய நிலையில் தற்போது அதற்கு அவர் பதிலடி கொடுத்திருக்கின்றார்.

Story first published: Sunday, March 1, 2026, 22:17 [IST]
Other articles published on Mar 1, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+