Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: காலம், காலமாக இருக்கும் நடைமுறையை மாற்றும் கில்,கம்பீர்..பும்ரா குறித்தும் முக்கிய முடிவு

துபாய்: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி அகமதாபாத்தில் விளையாடுகிறது. பொதுவாக இந்திய அணி சொந்த மண்ணில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் இரண்டு வேகப்பந்துவீச்சாளர்களை வைத்துதான் விளையாடும்.

ஆனால் அகமதாபாத்தில் நாளை நடைபெறும் முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி மூன்று வேகப்பந்துவீச்சாளர்களை வைத்து விளையாட முடிவெடுத்திருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது. இதற்கு காரணம் அகமதாபாத்தில் அமைக்கப்பட்டுள்ள ஆடுகளத்தில் புற்கள் அதிக அளவு இருப்பதாக கூறப்படுகிறது.

Shubman gill

இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய இந்திய அணி கேப்டன் கில், பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கப் போகிறது என்பதை நாளை தான் நாங்கள் முடிவு செய்வோம். ஆனால் வானிலையும், ஆடுகளமும் கூடுதலாக ஒரு வேகப்பந்துவீச்சாளரை வைத்து விளையாட எங்களை தூண்டுகிறது.

எனினும் நாளை தான் இது குறித்து இறுதி முடிவு எடுப்போம் ஆடுகளத்தில் ஈரப்பதம் இருக்கிறதா என்றும் பார்க்க வேண்டும். ஆசிய கோப்பை போட்டி முடிவடைந்த உடனேயே இந்த டெஸ்ட் தொடர் நடைபெறுகிறது. நான் டெஸ்ட் போட்டிக்கு ஏற்ற மனநிலையை மாற்றிக் கொள்ளும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றேன்.

பேட்டிங் யுக்தியை விட மனதளவிலான யுக்தி தான். இதற்கு முக்கியம் என்று நான் நினைக்கின்றேன். பும்ரா ஒரு டெஸ்ட் தொடரில் இரண்டு போட்டிகளிலும் விளையாடுவாரா என்பதை முன்கூட்டியே இனி நாங்கள் முடிவு எடுக்க மாட்டோம். ஒவ்வொரு டெஸ்ட் போட்டியிலும் அவர் எவ்வாறு பந்து வீசுகிறார். அவருடைய உடல் நலம் எப்படி இருக்கிறது என்பதை பார்த்துதான் இனி முடிவு எடுப்போம்.

நாங்கள் அதிகளவு கிரிக்கெட் விளையாடுவதை, ஒவ்வொரு வாரமாக பிரித்துக் கொண்டு நான் அனுப்புகிறேன். எதிர்காலத்தில் என்ன இருக்கிறது என்பது குறித்து எல்லாம் யோசிப்பதில்லை. பேட்ஸ்மேனை பொறுத்தவரை உடல் ரீதியாக சோர்வு அடைவதை விட மனரீதியான சோர்வு தான் அதிகம் இருக்கும். ஆனால் பவுலர்களுக்கு தான் உடல் அலுவலர் அதிகம் இருக்கும்.

ஆனால் தற்போது நான் நல்ல மனநிலையில் தான் இருக்கின்றேன். நாங்கள் எந்த அணியும் சாதாரணமாக எடுத்துக் கொள்ள மாட்டோம். வெஸ்ட் இண்டீஸ் எதிராக எங்களுடைய முழு பலத்துடன் தான் விளையாட போகிறோம். கடினமான கிரிக்கெட்டை ஆட நாங்கள் தயாராக இருக்கின்றோம். கிட்டத்தட்ட ஒரு ஆண்டுக்கு பிறகு சொந்த மண்ணில் டெஸ்ட் போட்டிகளில் விளையாடுகிறோம் என்று நினைக்கின்றேன்.

அனைத்து தொடரும் எங்களுக்கு முக்கியம்தான். இந்த தொடரில் ஆதிக்கம் செலுத்த நாங்கள் முயற்சி செய்வோம். எங்களுடைய ஆடுகளம் பவுலர்கள் மற்றும் பேட்ஸ்மேன்கள் இருவருக்குமே சாதகமாக இருக்க வேண்டும் என்று நினைக்கின்றோம். எந்த அணியுமே இந்தியாவுக்கு வருகிறோம் என்றால் இங்கு சுழற் பந்துவீச்சு மற்றும் ரிவர்ஸ்விங் சவால் இருக்கும் என்று கண்டிப்பாக நினைக்கும் என்று கூறியுள்ளார்.

Story first published: Wednesday, October 1, 2025, 23:55 [IST]
Other articles published on Oct 1, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+