For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs WI: இதை மட்டும் செய்தால் வெஸ்ட் இண்டீஸ் காலி.. இந்தியாவின் மெகா திட்டம்.. இன்னிங்ஸ் வெற்றி?

அகமதாபாத்: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான அகமதாபாத் டெஸ்டின் முதல் நாளே ஆட்டத்தை முழுமையாகத் தன்வசப்படுத்தியுள்ள இந்திய அணி, இப்போது சாதாரண வெற்றியை அல்ல, ஒரு பிரம்மாண்டமான இன்னிங்ஸ் வெற்றியை நோக்கித் தனது கவனத்தை திருப்பியுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியை முதல் இன்னிங்ஸில் வெறும் 162 ரன்களுக்குச் சுருட்டியது இந்திய அணி. அடுத்து இந்திய அணி பேட்டிங் செய்தது. முதல் நாள் ஆட்டநேர முடிவில் இந்திய அணி 2 விக்கெட் இழப்பிற்கு 121 ரன்கள் எடுத்து வலுவான நிலையில் உள்ளது.

இன்னும் 8 விக்கெட்டுகள் கைவசம் இருக்க, வெஸ்ட் இண்டீஸின் ஸ்கோரைக் கடக்க வெறும் 41 ரன்கள் மட்டுமே தேவை என்ற நிலையில் ஆடி வருகிறது இந்திய அணி. இந்தப் போட்டியை மூன்று நாட்களுக்குள் முடித்துவிட இந்திய அணி ஒரு தெளிவான திட்டத்துடன் களமிறங்கியுள்ளது.

IND vs WI Shubman Gill s Team Aims for 400 Runs Plan to Finish Ahmedabad Test in 3 Days

இந்திய அணியின் பிரம்மாண்ட இலக்கு

இந்தியாவின் திட்டம், வெறும் 163 ரன்களைக் கடந்து முன்னிலை பெறுவது மட்டுமல்ல. வெஸ்ட் இண்டீஸ் அணியை மீண்டும் பேட்டிங் செய்ய அழைக்காமல், ஒரே இன்னிங்ஸில் வெற்றியைப் பதிவு செய்வதே ஆகும். அதற்கு, இந்திய அணி முதல் இன்னிங்ஸில் குறைந்தது 350 முதல் 400 ரன்கள் வரை குவிக்க வேண்டும்.

அதாவது, வெஸ்ட் இண்டீஸை விடக் குறைந்தது 200 முதல் 250 ரன்கள் வரை முன்னிலை பெற்றால் மட்டுமே, அந்த அணிக்கு இரண்டாவது இன்னிங்ஸில் கடும் நெருக்கடியைக் கொடுத்து, இன்னிங்ஸ் வெற்றியைப் பெற முடியும். இந்த வியூகத்தைச் சரியாகச் செயல்படுத்தினால், இந்தப் போட்டி மூன்றாவது நாளிலேயே முடிவுக்கு வர அதிக வாய்ப்புள்ளது. ஒருவேளை வெஸ்ட் இண்டீஸ் அணி இரண்டாவது இன்னிங்ஸிலும் இதேபோலச் சொதப்பினால், ஆட்டம் இரண்டாவது நாளிலேயே முடிந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.

ராகுல் - கில் ஜோடி மீது அதிக எதிர்பார்ப்பு

இந்த இமாலய இலக்கை எட்டுவதற்கான முழுப் பொறுப்பும் தற்போது களத்தில் நிற்கும் கே.எல். ராகுல் மற்றும் கேப்டன் சுப்மன் கில் ஆகியோரின் கைகளில்தான் உள்ளது. முதல் நாள் ஆட்டநேர முடிவில், அனுபவ வீரர் கே.எல். ராகுல் 53 ரன்களுடன் அரைசதம் கடந்து நம்பிக்கையுடன் களத்தில் நிற்கிறார். அவர் தனது இந்த அரைசதத்தை ஒரு பெரிய சதமாக மாற்ற வேண்டியது அணிக்கு மிகவும் அவசியம்.

மறுமுனையில், கேப்டன் சுப்மன் கில் 18 ரன்களுடன் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார். ஒரு கேப்டனாக அணியை முன்னின்று வழிநடத்தி, ஒரு மிகப்பெரிய இன்னிங்ஸை ஆட வேண்டிய கட்டாயம் அவருக்கு உள்ளது. இந்த ஜோடி, இரண்டாவது நாளின் முதல் பாதியில் விக்கெட்டை இழக்காமல், ஒரு பிரம்மாண்டமான பார்ட்னர்ஷிப்பை அமைத்தால், இந்தியாவின் இன்னிங்ஸ் வெற்றிக்கான அஸ்திவாரம் உறுதியாகிவிடும்.

இந்த இருவரை மட்டுமே நம்பி இந்திய அணி இல்லை. அவர்களுக்குப் பிறகு, விக்கெட் கீப்பர் - பேட்ஸ்மேன் துருவ் ஜுரல், ஆல்-ரவுண்டர்களான ரவீந்திர ஜடேஜா, வாஷிங்டன் சுந்தர் மற்றும் நிதிஷ் குமார் ரெட்டி என ஒரு வலுவான பேட்டிங் பட்டாளமே காத்திருக்கிறது. இந்த வீரர்கள் அனைவரும் கணிசமான ரன்களைச் சேர்க்கும் பட்சத்தில், இந்தியா 400 ரன்களைக் கடப்பது மிகவும் எளிதான விஷயமாகவே இருக்கும்.

எனவே, இரண்டாவது நாள் ஆட்டம், இந்திய பேட்ஸ்மேன்களின் ஆதிக்கத்தை முழுமையாக வெளிப்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வெஸ்ட் இண்டீஸ் பந்துவீச்சாளர்களைச் சோர்ந்து போகச் செய்து, ஒரு மெகா ஸ்கோரை நோக்கிப் பயணிப்பதே இந்தியாவின் ஒரே இலக்காக இருக்கும்.

Story first published: Friday, October 3, 2025, 8:26 [IST]
Other articles published on Oct 3, 2025
English summary
IND vs WI: Shubman Gill's Team Aims for 400 Runs, Plan to Finish Ahmedabad Test in 3 Days
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+