Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஜெய்ஸ்வால், உங்கள் ஆட்டத்தை பார்ப்பதே உற்சாகமா இருக்கு.. கவலைப்படாதீங்க தம்பி.. கவாஸ்கர் பாராட்டு!

டெல்லி: இந்திய அணியின் இளம் தொடக்க வீரர் யஷஸ்வி ஜெய்ஸ்வால் இன்னும் பெரிய பெரிய சதங்களை தொடர்ந்து விளாச வேண்டும் என்று சுனில் கவாஸ்கர் பாராட்டி உள்ளார். ஜெய்ஸ்வால் ஆட்டமிழந்தது பற்றி கவலைப்படத் தேவையில்லை என்று கூறிய கவாஸ்கர், அவரின் ஆட்டத்தை பார்ப்பதே அலாதியாக இருப்பதாக தெரிவித்துள்ளார்.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி விளையாடி வருகிறது. இந்தப் போட்டியில் முதலில் பேட்டிங் ஆடிய இந்திய அணி 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 518 ரன்களை குவித்து டிக்ளேர் செய்தது. இந்திய அணியில் சிறப்பாக ஆடிய ஜெய்ஸ்வால் 175 ரன்களையும், கேப்டன் சுப்மன் கில் 129 ரன்களையும் விளாசினர்.

IND vs WI

சர்வதேச டெஸ்ட் கிரிக்கெட் ஜெய்ஸ்வால் அடித்த 7வது சதமாக அமைந்தது. அதுமட்டுமல்லாமல் 23 வயதில் 7 டெஸ்ட் சதங்களை விளாசிய 2வது இந்திய வீரர் என்ற பெருமையை ஜெய்ஸ்வால் பெற்றுள்ளார். சச்சின் டெண்டுல்கருக்கு பின் 23 வயதில் 7 சதங்களை ஜெய்ஸ்வால் விளாசி இருக்கிறார். இதனால் இந்திய கிரிக்கெட்டின் அடுத்த சென்சேஷன் ஜெய்ஸ்வால் என்று ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இதுதொடர்பாக சுனில் கவாஸ்கர் பேசுகையில், ஜெய்ஸ்வாலின் ஆட்டத்தை மிகவும் அதிகமாக ரசித்தேன். அவர் எப்படி ஆட்டமிழந்தார் என்பதை பற்றி கவலை கிடையாது. ஆனால் ஜெய்ஸ்வாலின் ஆட்டத்தை பார்ப்பதே அலாதியாக உள்ளது. ஜெய்ஸ்வால் இதுபோன்று இன்னும் அதிக சதங்களை பெற வேண்டும். டாடி சதங்களை அடிக்க வேண்டும். ஏனென்றால் இப்போது நான் தாத்தாவாகிவிட்டேன்.

அதனால் ஜெய்ஸ்வால் தொடர்ச்சியாக பெரிய பெரிய சதங்களை விளாச வேண்டும் என்று பாராட்டினார். அதனை அருகில் நின்று கேட்டுக் கொண்டிருந்த ஜெய்ஸ்வால், நன்றி சார் என்று கூறி நெகிழ்ச்சியோடு நின்று கொண்டிருந்தார். இந்த வீடியோ சோசியல் மீடியாவில் ட்ரெண்டாகி வருகிறது. ஜெய்ஸ்வால் இந்த ஆட்டத்தில் இரட்டை சதத்தை விளாசி இருந்தால், இது அவரின் 3வது இரட்டை சதமாக அமைந்திருக்கும்.

ஏற்கனவே இங்கிலாந்து அணிக்கு எதிராக டெஸ்ட் தொடரின் போது 2 முறை இரட்டை சதத்தை விளாசி தள்ளினார். அதேபோல் ஜெய்ஸ்வால் இதுவரை ஆடியுள்ள இங்கிலாந்து, வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலியா மண்ணிலும் சதம் விளாசி அசத்தி இருக்கிறார். இதனால் இந்திய கிரிக்கெட்டின் முகமாக சுப்மன் கில்லுக்கு பின் ஜெய்ஸ்வால் உருவாகி வருவதாக பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, October 12, 2025, 14:07 [IST]
Other articles published on Oct 12, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+