ரிஷப் பண்ட் திடீர் முடிவால் ரசிகர்கள் அதிர்ச்சி..!! நல்லா தானே போய்ட்டு இருந்துச்சி..?
கொல்கத்தா: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டி20 தொடரிலிருந்து துணை கேப்டன் ரிஷப் பண்ட் பாதியிலிருந்து விலகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
Recommended Video
கே.எல்.ராகுல் இல்லாததால் இந்திய அணிக்கு துணை கேப்டன் பொறுப்பு ரிஷப் பண்டிடம் வழங்கப்பட்டது.
அதற்கு ஏற்றார் போல், இந்திய அணியின் வெற்றிக்கு முக்கிய பங்கும் ஆற்றினார் ரிஷப் பண்ட். கடந்த சில மாதங்களாக டெஸ்ட், ஒருநாள் போட்டியில் ரிஷப் பண்ட் ஜொலித்தார்.

24 இன்னிங்ஸ்
ஆனால், ஐபிஎல் போட்டிகளில் அதிரடியாக விளையாடும் ரிஷப் பண்ட், இந்தியாவுக்காக சர்வதேச டி20 போட்டியில் தொடர்ந்து சொதப்பினார். அவர் இந்தியாவுக்காக டி20 போட்டியில் அரைசதம் விளாசி 3 ஆண்டுகள் ஆகிறது. 24 இன்னிங்சில் ஒரு முறை கூட அரைசதம் அடிக்கவில்லை.

முற்று புள்ளி
டி20 உலககோப்பையில் இந்தியா பலமுறை தடுமாறிய போதும் ரிஷப் பண்ட் பெரிய ரன்களை குவிக்கவில்லை. இது ரிஷப் பண்ட் மீது ஒரு விமர்சனமாகவே வைக்கப்பட்டது. இதனை மாற்ற வேண்டும் என்ற வெறியுடன் நேற்று களத்துக்கு வந்த ரிஷப் பண்ட், 27 பந்துகளில் அரைசதம் விளாசினார். இதன் மூலம் விமர்சனத்துக்கு ரிஷப் பண்ட் முற்றுப் புள்ளி வைத்தார்.

விலகல்
இந்த நிலையில், ரிஷப் பண்ட்டுக்கு ஓய்வு வழங்க இந்திய அணி நிர்வாகம் முடிவு எடுத்துள்ளது. தொடர்ந்து ஐபிஎல், டி20 உலகக் கோப்பை, நியூசிலாந்து, தென்னாப்பிரிக்கா, வெஸ்ட் இண்டீஸ் என 6 மாதமாக ரிஷப் பண்ட் விளையாடுவதால், அவருக்கு கடைசி டி20 மற்றும் இலங்கை தொடரிலும் ரிஷப் பண்ட்க்கு ஓய்வு வழங்கப்பட உள்ளது.

வாய்ப்பு
இதன் மூலம் கடைசி டி20 மற்றும் இலங்கை தொடரில் இஷான் கிஷனுக்கு முழு நேர விக்கெட் கீப்பராக செயல்பட வாய்ப்புள்ளது. மேலும் சஞ்சு சாம்சன், கேஎஸ் பரத் ஆகியோர் அணியில் இடம்பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இலங்கை தொடருக்கான அணி அடுத்த சில நாட்களில் அறிவிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications