Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணியிலிருந்து விலகிய கோலி..!! பயோ பபுளிலிருந்து வெளியேறினார்.. மோதலா? காதலா?

கொல்கத்தா: மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக டி20 தொடரிலிருந்து விராட் கோலி பாதியில் விலகிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கேப்டன்ஷிப் விவகாரம் தற்போது தான் ஓய தொடங்கியுள்ளது. விராட் கோலியும், ரோகித் சர்மாவும் களத்துக்கு உள்ளேயும், வெளியேயும் சரி ஒருவருக்கு ஒருவர் ஆதரவாக இருந்து வருகின்றனர்.

இந்த நிலையில், விராட் கோலி ஃபார்ம் காரணமாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. அதற்கு எல்லாம் ரோகித் பதில் சொல்லி வந்தார்.

கோலி அரைசதம்

கோலி அரைசதம்

நேற்று நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 2வது டி20 போட்டியில் விராட் கோலி தனது பழைய ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இதன் மூலம் டி20 போட்டியில் 30 முறை அரைசதம் அடித்து இருந்தார் விராட் கோலி. இந்த இன்னிங்சில் 7 பவுண்டரிகளும், 1 சிக்சரும் அடங்கும். கோலி ஃபார்ம்க்கு திரும்பியது அவரது ரசிகர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது.

விலகிய கோலி

விலகிய கோலி

இந்த நிலையில், விராட் கோலி இந்திய அணியிலிருந்து விலகி, மும்பைக்கு விமானம் மூலம் சென்றுவிட்டார். வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன் இலங்கைக்கு எதிராக தொடர் 3 டி20 போட்டிகள் நடைபெறுகிறது. வீரர்கள் பயோ பபுளில் தொடர்ந்து இருப்பதால் அவர்களது ஆட்டத்தில் தொய்வு ஏற்படும்.

இலங்கை தொடர்

இலங்கை தொடர்

இதனால், விராட் கோலிக்கு ஓய்வு வழங்கப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் தொடரை வென்றதால் விராட் கோலியின் முக்கியத்துவம் அணிக்கு தேவையில்லை. மேலும் இலங்கை தொடரிலும் கோலி ஓய்வில் இருந்து, பெங்களூருவில் நடைபெறும் இலங்கைக்கு எதிரான 2வது டெஸ்டில் அணிக்கு திரும்பலாம் என்று கோலி முடிவு எடுத்துள்ளார்.

வாய்ப்பு

வாய்ப்பு

இதனால், கோலிக்கு ஒரு 18 நாட்கள் ஓயுவு கிடைக்கும். இதில், அவர் தனது காதல் மனைவி அனுஷ்கா சர்மாவுடன் நேரத்தை செலவிட முடிவு எடுத்துள்ளார். விராட் கோலி அணியிலிருந்து விலகினால் ஸ்ரேயாஸ் ஐயர், தீபக் ஹூடா, ஷாரூக்கான் உள்ளிட்ட வீரர்களுக்கு வாய்ப்பு கிடைக்கும்.

Story first published: Saturday, February 19, 2022, 12:20 [IST]
Other articles published on Feb 19, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+