For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

21 ஆண்டுகளாக தொடரும் சோகம்.. ஒரு டெஸ்டில் கூட வெற்றி பெறாத வெஸ்ட் இண்டீஸ்.. இந்தியா ஆதிக்கம்

டோமினிக்கா : ஒரு காலத்தில் கிரிக்கெட்டின் அரசனாக இருந்த வெஸ்ட் இண்டீஸ் தற்போது பெயரை சொல்ல முடியாத அளவிற்கு மோசமான நிலையில் இருக்கிறது. நல்லா வாழ்ந்து கெட்ட குடும்பம் என்று சொல்வார்களே அது போல் சர்வதேச கிரிக்கெட்டுக்கு வெஸ்ட் இண்டீஸ் மாறிவிட்டது.

இந்த நிலையில் உலக கோப்பை கிரிக்கெட் தொடருக்கு தகுதி பெற முடியாத நிலை வெஸ்ட் இண்டீஸ் க்கு ஏற்பட்டிருக்கிறது. இந்த நிலையில் தற்போது பலம் வாய்ந்த இந்திய அணியை தங்களது சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் எதிர்கொள்கிறது.

ind vs wi test series head to head record- will west indies break 21 years win less streak

இந்த போட்டி இன்று மாலை 7 மணிக்கு தொடங்கும். இந்த நிலையில் இரு அணிகளும் இதுவரை 98 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி இருக்கிறார்கள். இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி 30 முறையும், இந்திய அணி 22 முறையும் வெற்றிகளை பெற்றிருக்கிறது. 46 போட்டிகள் சமனில் முடிந்து இருக்கிறது. இதேபோன்று வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களது சொந்த மண்ணில் இந்தியாவுக்கு எதிராக 16 போட்டிகளில் வெற்றியும் 9 போட்டிகளில் தோல்வியும் தழுவி இருக்கிறது.

வெஸ்ட் இண்டீஸ் ஆதிக்கம் செலுத்தியது போல் இந்த ரெக்கார்டுகள் தெரிந்தாலும் கடந்த 21 ஆண்டுகளாக இந்தியாவுக்கு எதிராக அந்த அணி ஒரு டெஸ்ட் போட்டியில் கூட வெற்றி பெற்றதில்லை. அந்த அளவுக்கு வெஸ்ட் இண்டீஸ் அணி பலம் குன்றிய அணியாக மாறிவிட்டது. கடைசியாக அவர்கள் 2002 ஆம் ஆண்டு மே மாதம் இந்தியாவுக்கு எதிராக டெஸ்ட் போட்டியில் வெற்றி பெற்றார்கள். இந்த சோகமான சாதனையை மாற்ற வேண்டிய நெருக்கடியில் வெஸ்ட் இண்டீஸ் உள்ளது.

ind vs wi test series head to head record- will west indies break 21 years win less streak

இதேபோன்று கடந்த 10 டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு எதிராக சொந்த மண்ணில் வெஸ்ட் இண்டீஸ் ஒரு வெற்றியை கூட பெறவில்லை. கடைசியாக நடைபெற்ற ஐந்து டெஸ்ட் போட்டிகளில் கூட இந்திய அணி நான்குக்கு பூஜ்ஜியம் என்ற கணக்கில் வெற்றி பெற்றிருக்கிறது. எனினும் வெஸ்ட் இண்டீஸ் அணியை தற்போது அவ்வளவு எளிதாக எண்ணிவிட முடியாது. காரணம் 2021 ஆம் ஆண்டு அவர்கள் பலம் வாய்ந்த இங்கிலாந்து அணியை தங்களது சொந்த மண்ணில் வீழ்த்தி இருக்கிறார்கள்.

வெஸ்ட் இண்டீசிலும் தற்போது டெஸ்ட் கிரிக்கெட்டில் பெயர் சொல்லும் அளவுக்கு வீரர்கள் இருக்கிறார்கள். இதனால் இந்தியாவுக்கு எதிராக சோகமான சாதனையை மாற்ற வேண்டும் என்று வெஸ்ட் இண்டீஸ் அணியும், ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்று இந்திய அணியும் இருப்பதால் இந்தத் தொடரில் விறுவிறுப்புக்கு பஞ்சம் இருக்காது.

Story first published: Wednesday, July 12, 2023, 14:29 [IST]
Other articles published on Jul 12, 2023
English summary
ind vs wi test series head to head record- will west indies break 21 years win less streak
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+