For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

“அப்பா பேச்சால் மகனுக்கு தண்டனை”.. அபிமன்யு ஈஸ்வரனை கரம் வைத்து ஒதுக்கிய பிசிசிஐ? என்ன நடந்தது?

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கான இந்திய அணி சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், அதில் உள்நாட்டுப் போட்டிகளிலும், இந்தியா 'ஏ' அணிக்காகவும் தொடர்ந்து சிறப்பாகச் செயல்பட்டு வரும் இளம் வீரர் அபிமன்யு ஈஸ்வரனின் பெயர் இடம்பெறாதது, கிரிக்கெட் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

இது குறித்து பிசிசிஐ வட்டாரத்தில் வேறு ஒரு காரணம் கூறப்படுகிறது. கடந்த முறை இந்திய அணி இங்கிலாந்துக்குச் சுற்றுப்பயணம் செய்தபோது, அபிமன்யு ஈஸ்வரன் மாற்று வீரராக அணியுடன் பயணம் செய்தார். ஆனால், தொடர் முழுவதும் அவருக்கு ஆடும் லெவனில் ஒரு போட்டியில் கூட வாய்ப்பளிக்கப்படவில்லை.

IND vs WI Test Was Abhimanyu Easwaran Sidelined Because of His Father s Comments

இதனால் விரக்தியடைந்த அவரது தந்தை ரங்கநாதன் ஈஸ்வரன், ஊடகங்களிடம் பேசும்போது தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தினார். "ஒரு வீரரை அணியுடன் அழைத்துச் சென்று, தொடர் முழுவதும் தண்ணீர் தூக்கவும், பயிற்சிக்கு பந்து வீசவும் மட்டும் பயன்படுத்துவது எந்த விதத்தில் நியாயம்? ஆடும் லெவனில் வாய்ப்பே வழங்கப்படாது என்றால், அவரை எதற்காக அணியுடன் அழைத்துச் செல்ல வேண்டும்? இது வீரரின் மன உறுதியைக் குலைக்கும் செயல்" என்பது போன்ற கருத்துக்களை அவர் தெரிவித்திருந்தார்.

அணி நிர்வாகத்தின் தேர்வு முறையை வெளிப்படையாக விமர்சிக்கும் வகையில் அமைந்த அவரது இந்தப் பேச்சு, அப்போது பிசிசிஐ வட்டாரத்தில் சலசலப்பை ஏற்படுத்தியது. வீரர்கள் அல்லது அவர்களது குடும்பத்தினர், அணித் தேர்வு மற்றும் நிர்வாகம் குறித்துப் பொதுவெளியில் விமர்சிப்பதை பிசிசிஐ ஒருபோதும் விரும்புவதில்லை. இந்த நிலையில், அபிமன்யு ஈஸ்வரனின் தந்தை பேசியது, தேர்வாளர்கள் மற்றும் அணி நிர்வாகத்தின் அதிருப்திக்கு ஆளாகியிருக்கலாம் என்றும், அதன் விளைவாகவே தற்போது அவர் திட்டமிட்டு ஓரங்கட்டப்படுகிறார் என்றும் கூறப்படுகிறது.

தேர்வுக் குழுத் தலைவர் அஜித் அகர்கர் கூறியது என்ன?

இந்திய அணி அறிவிப்புக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த தேர்வுக் குழு தலைவர் அஜித் அகர்கரிடம், அபிமன்யு ஈஸ்வரன் தேர்வு செய்யப்படாதது குறித்துக் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்குப் பதிலளித்த அகர்கர், நேரடியாக ஈஸ்வரன் குறித்துப் பேசவில்லை என்றாலும், அணித் தேர்வின் அணுகுமுறையை விளக்கினார்.

"உள்ளூர் டெஸ்ட் போட்டிகளில் மூன்றாவது துவக்க வீரருக்கான அவசியம் இல்லை. நாங்கள் எப்போதும் சிறந்த வீரர்களைத் தேர்வு செய்யவே விரும்புகிறோம். தற்போது சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பளிக்க முடிவு செய்துள்ளோம். தேவதத் படிக்கல் போன்ற வீரர்கள் உள்நாட்டுப் போட்டிகளில் சிறப்பாகச் செயல்பட்டுள்ளார்கள்."

"சர்பராஸ் கான்-க்கு காயம் ஏற்பட்டதால், மிடில் ஆர்டரில் ஒரு இடம் காலியாக இருந்தது. அந்த இடத்திற்குப் பொருத்தமான வீரர்களை நாங்கள் பரிசீலித்தோம். யாருக்கான கதவும் மூடப்படவில்லை. வீரர்கள் தொடர்ந்து சிறப்பாகச் செயல்படும்போது, அவர்களுக்கான வாய்ப்பு நிச்சயம் வழங்கப்படும்" என்று அகர்கர் பொதுவாகப் பதிலளித்தார். இதன் மூலம், ஃபார்ம் மற்றும் புதிய வீரர்களுக்கு வாய்ப்பளிப்பதே காரணம் என்று தேர்வுக் குழுத் தரப்பில் கூறப்படுகிறது.

அபிமன்யு ஈஸ்வரன் திறமையான வீரர் என்பதில் சந்தேகமில்லை. அவர் தொடர்ந்து இந்தியா 'ஏ' அணிக்காக ரன் குவித்து வருகிறார். ஆனால், சமீபத்திய துலீப் டிராபி மற்றும் ஆஸ்திரேலியா 'ஏ' அணிக்கு எதிரான போட்டிகளில், அவர் பெரிய அளவில் ரன் குவிக்கவில்லை. எனவே, அவரது தற்போதைய ஃபார்மும் ஒரு காரணமாக இருக்கலாம்.

இருப்பினும், பல ஆண்டுகளாக இந்திய அணியின் கதவைத் தட்டிக்கொண்டிருக்கும் ஒரு வீரர், சர்பராஸ் கான் காயத்தால் விலகிய பிறகும் பரிசீலிக்கப்படாததும், அதே நேரத்தில் தேவதத் படிக்கல் போன்ற வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருப்பதும், இந்த சர்ச்சைக்கு மேலும் வலு சேர்க்கிறது. திறமை மட்டும் அளவுகோலா அல்லது வெளிப்படையான விமர்சனங்களுக்கான தண்டனையா என்ற கேள்வி எழுந்துள்ளது.

Story first published: Thursday, September 25, 2025, 20:24 [IST]
Other articles published on Sep 25, 2025
English summary
IND vs WI Test: Was Abhimanyu Easwaran Sidelined Because of His Father's Comments?
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+