Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: கம்பீர் திட்டத்தை வெளியே போட்டு உடைத்த திலக் வர்மா.. 4வது டி20க்கு முன் காமெடி

ஐதராபாத்: மேற்கிந்தியத் தீவுகளுக்கு எதிரான நான்காவது டி20 போட்டிக்கு முன்னதாக, இந்திய அணியின் பந்துவீச்சாளர்களுக்குத் தலைமைப் பயிற்சியாளர் கெளதம் கம்பீர் கூறிய முக்கியமான அறிவுறுத்தலைத் துணை கேப்டன் திலக் வர்மா வெளிப்படுத்தியுள்ளார்.

இரண்டாவது டி20 போட்டியில் பந்துவீச்சாளர்கள் தற்காப்பு ஆட்டத்தைக் கையாண்ட நிலையில், எதிரணி ஆதிக்கம் செலுத்த இடம் தராமல், விக்கெட்டுகளை வீழ்த்துவதில் கவனத்தைச் செலுத்த வேண்டும் என்றும், களத்தில் தீவிரமான அணுகுமுறையை வெளிப்படுத்த வேண்டும் என்றும் கம்பீர் அறிவுறுத்தியுள்ளார்.

Tilak varma

இது குறித்து பேசிய திலக் வர்மா, "இரண்டாவது போட்டியில் எதிரணி அதிரடியாக ரன்களைக் குவித்தபோது, நாங்கள் விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிக்காமல் சற்று தற்காப்பு நிலைக்குச் சென்றுவிட்டோம். ஆனால், அதன் பிறகு பயிற்சியாளர் கெளதம் கம்பீர், நாம் விக்கெட்டுகளை வீழ்த்த முயற்சிக்க வேண்டும் என்றும், களத்தில் நமது அதிரடி அணுகுமுறையைக் காட்ட வேண்டும் என்றும் கூறினார்" என்று தெரிவித்தார். பொதுவாக பயிற்சியாளர்கள் அணி வீரர்களுடன் விவாதிப்பதை யொரும் வெளியே சொல்ல மாட்டார்கள். ஆனால் திலக் வர்மா கம்பீர் சொன்னதை அப்படியே மனப்பாடம் செய்து ஒப்பித்துவிட்டதாக நெட்டிசன்கள் கிண்டலடித்துள்ளனர்.

IND vs WI: இந்த 2 வீரரை நீக்கிய கம்பீர் முடிவு சரியானது தான்.. புஜாரா பாராட்டு

IND vs WI: இந்த 2 வீரரை நீக்கிய கம்பீர் முடிவு சரியானது தான்.. புஜாரா பாராட்டு

தொடர்ந்து பேட்டிங் வரிசை குறித்து பேசிய அவர், "மூன்றாவது இடத்தில் பேட்டிங் செய்வதை நான் மிகவும் விரும்புகிறேன். அதை பலமுறை கூறியிருக்கிறேன். அந்த அழுத்தத்தை எதிர்கொள்ள நான் எப்போதும் விரும்புகிறேன். அணிக்கு எனது பங்களிப்பு தேவைப்படும்போது சிறப்பாகச் செயல்பட விரும்புகிறேன்" என்று திலக் வர்மா கூறினார்.

IND vs WI: திலக் வர்மா கடற்கரையில் நடப்பது போல் ரன் அவுட் ஆகிவிட்டார்.. சடகோபன் ரமேஷ் கடும் சாடல்

Also Read

IND vs WI: திலக் வர்மா கடற்கரையில் நடப்பது போல் ரன் அவுட் ஆகிவிட்டார்.. சடகோபன் ரமேஷ் கடும் சாடல்

டி20 கிரிக்கெட்டில் 3-வது வரிசையில் 13 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள திலக் வர்மா, 55.37 சராசரி மற்றும் 169.73 ஸ்டிரைக் ரேட்டுடன் இரண்டு சதங்கள் உட்பட 443 ரன்கள் குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில், தொடரை கைப்பற்ற இந்தப் போட்டி இந்திய அணிக்கு மிகவும் முக்கியம் என்பதால், பிளேயிங் லெவனில் பெரிய மாற்றம் இருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Wednesday, October 14, 2026, 6:30 [IST]
Other articles published on Oct 14, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+