Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"இது கிரிக்கெட் பிட்ச் இல்ல... தார் ரோடு" ஆடுகள தயாரிப்பாளர்களை கிழித்து தொங்கவிட்ட வாசிம் ஜாஃபர்

மும்பை: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் இடையேயான 2வது ஒருநாள் போட்டியில் ஒரே நாளில் 811 ரன்கள் குவிக்கப்பட்ட நிலையில், குவஹாத்தி ஆடுகளத்தை முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாஃபர் மிகக் கடுமையாக விமர்சித்துள்ளார். "இது கிரிக்கெட் ஆடுகளம் போல இல்லை; ரோட் ரோலரை விட்டு சமன் செய்த தார் ரோடு போல உள்ளது" என்று அவர் சாடியுள்ளார்.

குவஹாத்தியில் நடைபெற்ற போட்டியில் முதலில் பேட்டிங் செய்த வெஸ்ட் இண்டீஸ் அணி 405 ரன்கள் குவித்தது. ஜான் கேம்ப்பெல், ஷாய் ஹோப், அமீர் ஜாங்கு ஆகியோர் சதம் அடித்தனர். தொடர்ந்து ஆடிய இந்திய அணி சுப்மன் கில்லின் வரலாற்று இரட்டை சதம் (223*) மற்றும் ரோஹித் சர்மாவின் அதிரடி சதம் (101) ஆகியவற்றின் மூலம் 44வது ஓவரிலேயே 406 ரன்கள் எடுத்து 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

ஒட்டுமொத்த போட்டியில் 9 விக்கெட்டுகள் மட்டுமே விழுந்த நிலையில், 79 பவுண்டரிகளும் 27 சிக்சர்களும் பறந்தன. இந்திய அணி 30 ஓவர்களுக்குப் பிறகும் ஓவருக்கு 10 ரன்கள் வீதம் விளாசியது.

IND vs WI Wasim Jaffer Slams Guwahati Pitch as Tar Road After 811-Run Run-Fest in India vs West Indies ODI

வாசிம் ஜாஃபர் காட்டம்

இது பற்றி தனது யூடியூப் சேனலில் பேசிய வாசிம் ஜாஃபர் ஆடுகள தயாரிப்பாளர்களை விளாசித் தள்ளினார். "இன்றைய நவீன கிரிக்கெட்டில் பந்துவீச்சாளராக இருப்பதே மிகப்பெரிய பாவம். அவர்களைப் பார்த்தால் எனக்கு மிகவும் பரிதாபமாக இருக்கிறது. எங்கள் காலத்தில் வாசிம் அக்ரம், வக்கார் யூனிஸ் போன்ற வேகப்பந்து வீச்சாளர்கள் இருந்தார்கள். ஆனால் இந்த குவஹாத்தி ஆடுகளத்தில் பந்துவீச்சாளர்களுக்கு துளி கூட உதவி இல்லை. ஆடுகள தயாரிப்பாளர்கள் ரோட் ரோலரில் அமர்ந்து ஒரு தார் ரோட்டை போட்டுக் கொடுத்தது போல இருந்தது.

இனிவரும் காலங்களில் 350 முதல் 400 ரன்கள் என்பது மிக சாதாரணமாக மாறிவிடும் போலிருக்கிறது. பந்துவீச்சாளர்களுக்கு ஆடுகளத்தில் ஏதேனும் வாய்ப்பு இருக்க வேண்டும். இல்லையென்றால் கிரிக்கெட் பார்க்கவே மிகவும் சலிப்பை ஏற்படுத்திவிடும். பேட்டுக்கும் பாலுக்கும் சம பலத்துடன் போட்டி இருக்க வேண்டும்" என்றார்.

அறிமுக வீரர் ஆகிப் நபிக்கு ஆதரவு

அறிமுக போட்டியிலேயே 8.5 ஓவர்களில் 84 ரன்களை வாரி வழங்கிய 29 வயதான இந்திய வேகப்பந்து வீச்சாளர் ஆகிப் நபியையும் ஜாஃபர் ஆதரித்துப் பேசினார். "அனைத்து பந்துவீச்சாளர்களுமே இந்த போட்டியில் அடி வாங்கினார்கள். எனவே முதல் போட்டியில் ஆடிய ஆகிப் நபியை மட்டும் வைத்து அவரை குறை சொல்வது நியாயமல்ல. அவர் வெள்ளைப்பந்து கிரிக்கெட்டுக்கான பந்துவீச்சாளர் கிடையாது.

"98-தான்.. சச்சினின் 100 சதங்களை விராட் கோலி தொட முடியாது".. ஆகாஷ் சோப்ரா அதிரடி கணிப்பு

அவர் டெஸ்ட் கிரிக்கெட்டில் மிகச்சிறந்த ரெக்கார்டு வைத்துள்ளார். அவரை நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் தொடரில் தேர்வு செய்ய வேண்டும். சர்வதேச அணிக்கு தேர்வானது மகிழ்ச்சி என்றாலும், வரவிருக்கும் ரஞ்சி கோப்பையில் ஜம்மு காஷ்மீர் அணி நபியின் பங்களிப்பை இழக்க நேரிடும்" என்று ஜாஃபர் தெரிவித்தார்.

Story first published: Friday, October 2, 2026, 13:14 [IST]
Other articles published on Oct 2, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+