Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வெஸ்ட் இண்டீஸ்யிடம் மாற்றத்தை பார்ப்பீங்க.. இந்தியாவுக்கு நெருக்கடி தருவோம்..WI கேப்டன் சேஸ் கருத்து

மும்பை: இந்தியா வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி வெள்ளிக்கிழமை டெல்லி பிரோஷா கோட்லா மைதானத்தில் தொடங்குகிறது. முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

இந்த நிலையில இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இந்தியாவுக்கு நெருக்கடி கொடுப்போம் என வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் ராஸ்டன் சேஸ் தெரிவித்துள்ளார். இது குறித்து பேசிய அவர் இரண்டாவது டெஸ்டில் ஏதேனும் ஒரு மாற்றம் நிகழ வேண்டும்.

Ind vs WI

அந்த மாற்றம் இரண்டாவது டெஸ்டில் தொடங்கும் என்று நான் நம்புகிறேன். இதற்காக நம்பிக்கையுடன் நாங்கள் இருக்கின்றோம். ஒவ்வொரு வீரர்களும் சிறப்பாக செயல்பட வேண்டும் என்று உத்வேகத்துடன் இருக்கின்றோம். நிச்சயமாக எங்களால் ஒரு நல்ல கிரிக்கெட்டை விளையாட முடியும்.

எங்கள் அணி வீரர்களுக்கு நம்பிக்கை இல்லை என்று சொல்வதை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன். ஒரு பெரிய ஸ்கோர் அடித்தால் போதும்,அதிலிருந்து நாங்கள் தொடர்ந்து ரன்கள் சேர்ப்போம். ஒரு சதம், ஒரு அரை சதம் வந்தாலே எங்களுடைய பேட்ஸ்மேன்களில் நம்பிக்கை அதிகரித்து விடும்.

நிச்சயம் எங்களால் முடியும். எங்கள் அணியில் உள்ள ஒவ்வொரு வீரர்களும் முழு நம்பிக்கையுடன் இருக்கின்றோம். முதல் டெஸ்டில் ஒரு பேட்ஸ்மேன்களாக நாங்கள் சரியாக விளையாடவில்லை. தற்போது எங்களுக்கு ஏற்பட்டிருக்கும் நெருக்கடியை சமாளித்துக் கொண்டு ரன்கள் குவித்து இந்திய பவுலர்களுக்கு நெருக்கடியை ஏற்படுத்த வேண்டும்.

இது நிச்சயம் எங்களுக்கு மிகப்பெரிய சவால் தான். அதை நாங்கள் செய்வோம் என்று நம்புகிறோம். நான் யாருக்காகவும் பேச முடியாது. ஆனால் எனக்காக நான் பேச முடியும். நாங்கள் தொடர்ந்து முதல் தர கிரிக்கெட் போட்டிகளில் தரமான கிரிக்கெட் விளையாடி வருகிறோம். தொடர்ந்து ஒரு நல்ல பவுலிங் எதிர் கொண்டு விளையாடினால், நிச்சயம் எங்கள் தவறு என்று பாடம் கற்றுக்கொண்டு விளையாடுவோம்.

முதல் சில போட்டிகளில் விளையாடும் போது நம்மைப் பற்றி பலருக்கும் தெரியாது. ஆனால் இரண்டு மூன்று போட்டிகள் விளையாடிவிட்டால், நமது குறைகளை கண்டுபிடித்து அதனை பயன்படுத்தி எதிரணி விக்கெட்டுகள் எடுக்கும். எனவே அந்த குறைகளை திருத்திக் கொள்ளும் முயற்சியில் ஒவ்வொரு வீரர்களும் ஈடுபட வேண்டும்.

ஒரு பேட்ஸ்மேனாக நான்கு செஷன்கள் விளையாட வேண்டும். களத்தில் நேரத்தை அதிக அளவு செலவிட வேண்டும். ஒவ்வொரு பந்தையும் கவனித்து விளையாட வேண்டும். அதுதான் தற்போது இருக்கும் எங்களுக்கு மிகப்பெரிய சவால் என நினைக்கின்றேன். வெஸ்ட் இண்டீஸ் அணிக்காக விளையாடுவது எங்களுடைய கனவு. நாங்கள் கிரிக்கெட் விளையாட வந்திருக்கின்றோம். நாங்கள் எங்கள் நாட்டுக்காக விளையாடுகிறோம். எங்கள் நாட்டுக்காக எங்கள் இடம் இருக்கும் அனைத்தையும் கொடுப்போம் என்று வெஸ்ட் இண்டீஸ் கேப்டன் ராஸ்டன் செஸ் தெரிவித்துள்ளார்.

Story first published: Thursday, October 9, 2025, 23:24 [IST]
Other articles published on Oct 9, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+