IND vs WI: இந்திய அணி வெற்றி பெற 121 ரன்கள் இலக்கு.. 2வது இன்னிங்சில் 390 ரன்கள் குவித்த வெஸ்ட் இண்டீஸ்
டெல்லி: இந்திய அணிக்கு எதிரான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி 121 ரன்கள் வெற்று இலக்காக நிர்ணயித்திருக்கிறது. டெல்லியில் நடைபெற்று வரும் இந்த போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.
முதல் இன்னிங்ஸில் கில் மற்றும் ஜெய்ஸ்வாலின் அபார சதத்தால் இந்திய அணி 5 விக்கெட் இழப்பிற்கு 518 ரன்கள் எடுத்து டிக்ளேர் செய்தது. இதை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி தங்களுடைய முதல் இன்னிங்சில் களம் இறங்கியது. குல்தீப்பின் அபார விக்கெட் வேட்டையால் 248 ரன்களில் அந்த அணி ஆட்டம் இழந்தது.

இதனை அடுத்து இந்திய அணி பாலோ ஆன் கொடுத்ததை அடுத்து வெஸ்ட் இண்டீஸ் அணி மீண்டும் இரண்டாவது இன்னிங்சில் விளையாடியது. இதில் வெஸ்ட் இண்டீஸ் அணி வீரர்கள் பேட்டிங் நல்ல முன்னேற்றத்தை கண்டிருந்தது. குறிப்பாக அந்த அணியில் தொடக்க வீரர் ஜான் கேம்பேல் அபாரமாக விளையாடி சதம் விளாசினார்.
இதே போன்று சாய் ஹோப் 23 ரன்கள் எடுத்தார். நடு வரிசையில் ஜஸ்டின் கிரீஸ் அரை சதம் எடுக்க ஜேடன் சீல்ஸ் 32 ரன்கள் எடுத்தார். இதன் மூலம் வெஸ்ட் இண்டீஸ் அணி கடைசி இன்னிங்ஸில் 390 ரன்கள் எடுத்திருக்கிறது. இந்திய பந்துவீச்சு தரப்பில் பும்ரா, குல்தீப் தலா மூன்று விக்கெட்டுகளையும் சிராஜ் இரண்டு விக்கெட்டுகளையும் வீழ்த்தி இருக்கின்றனர்.
இதனை அடுத்து 121 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் இந்திய அணி களமிறங்கியுள்ளது
இன்னும் ஒரு நாள் ஆட்டம் எஞ்சியுள்ள நிலையில் இந்திய அணியின் வெற்றிக்கு வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. இலக்கும் குறைவாக இருப்பதால் கிட்டத்தட்ட இந்திய அணியின் வெற்றி உறுதி தான்.எனினும் ஆடுகளம் திடீரென்று சுழற் பந்துவீச்சுக்கு சாதகமாக மாறினார். இந்திய அணி கொஞ்சம் தடுமாற்றத்தை சந்திக்கலாம். ஏற்கனவே முதல் டெஸ்ட் போட்டியில் இந்திய அணி இன்னிங்ஸ் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications