Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs WI: சூப்பர் 8 போட்டியில் மழை பெய்து ஆட்டம் ரத்தானால், என்ன நடக்கும்? அரையிறுதி வாய்ப்பு யாருக்கு?

மும்பை: 2026 டி20 உலகக்கோப்பை சூப்பர் 8 சுற்றில் இந்தியா, மேற்கிந்திய தீவுகள் மோதும் வாழ்வா சாவா போட்டி ஞாயிற்றுகிழமை நடைபெறுகிறது. ஒரு வேலை, மழை காரணமாக இந்த போட்டி கைவிடப்பட்டால், யார் அரை இறுதிக்கு முன்னேறுவார் என்ற கேள்வி ரசிகர்கள் மத்தியில் எழுந்துள்ளது. மேற்கிந்திய தீவுகள் தென் ஆப்பிரிக்காவிடம் 9 விக்கெட் வித்தியாசத்தில் தோற்றது, பின்னர் இந்தியா சென்னை எம்.ஏ. சிதம்பரம் மைதானத்தில் ஜிம்பாப்வேவை 72 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.

இந்த பிரிவில் இரண்டே போட்டிகள் எஞ்சியுள்ளன. தென் ஆப்பிரிக்கா ஏற்கனவே தகுதி பெற்றதால், அதன் ஜிம்பாப்வே உடனான ஆட்டம் ஒரு சம்பிரதாயப் போட்டியே ஆகும். அடுத்ததாக, கொல்கத்தாவில் இந்தியா மேற்கிந்திய தீவுகள் மோதுகின்றன.

இந்தியா மற்றும் மேற்கிந்திய தீவுகள் தலா இரண்டு புள்ளிகளுடன் சமநிலையில் உள்ளதால், யார் வெல்கிறார்களோ அவர்களே நேரடியாக அரை இறுதிக்கு முன்னேறுவார்கள்; இதுவே ஒரு மெய்நிகர் கால் இறுதி.மாற்று நாள் இல்லாததால், மழை போன்ற காரணங்களால் போட்டி கைவிடப்பட்டால், புள்ளிகள் இரு அணிகளுக்கும் பகிர்ந்தளிக்கப்படும்.

அப்படி நடக்கும் பட்சத்தில், மேற்கிந்திய தீவுகள் (+1.791) சிறந்த நிகர ஓட்ட விகிதத்தால் அரை இறுதிக்குச் செல்லும். இந்தியாவின் ரன் ரேட் -0.100 என்ற அளவில் உள்ளதால், சூர்யகுமார் யாதவ் தலைமையிலான அணி வெளியேற்றப்படும். எனவே இந்தியா இந்தப் போட்டியை வெல்வது கட்டாயம்.

போட்டியில் முடிவு கிடைத்தால், ரன் ரேட் என்பது தேவையில்லை. ஏனெனில் வெல்லும் அணிக்கு நான்கு புள்ளிகள் கிடைக்கும், தோற்ற அணியால் அதனை எட்ட முடியாது. ஞாயிற்றுக்கிழமை கொல்கத்தாவில் மழைக்கு வாய்ப்பில்லை என வானிலை ஆய்வு மையம் கூறுகிறது, இதனால் இந்தியா முழுமையான போட்டியை எதிர்பார்க்கலாம்.

ஜிம்பாப்வேக்கு எதிரான போட்டியில் தென் ஆப்பிரிக்கா வென்றால், ந்த அணி முதலிடமும்.. இந்தியா/மேற்கிந்திய தீவுகள் இரண்டாம் இடம் பிடித்து, சூப்பர் 8 குரூப் 1 முதலிட அணியை சந்திக்கும்.ஜிம்பாப்வே வென்றால், தென் ஆப்பிரிக்கா அல்லது வென்ற இந்தியா/மேற்கிந்திய தீவுகள் அணியில் சிறந்த நிகர ஓட்ட விகிதம் கொண்ட அணி முதலிடம் பெற்று, சூப்பர் 8 குரூப் 2-ன் இரண்டாமிட அணியை சந்திக்கும்.

Story first published: Friday, February 27, 2026, 23:37 [IST]
Other articles published on Feb 27, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+