Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்று அதிரடி சரவெடி தான்.. ரன் குவிப்புக்கு சாதகமான ஆடுகளம்.. இந்திய வீரர்களிடையே கடும் போட்டி

ஹராரே : இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான முதல் ஒருநாள் போட்டி இன்னும் சற்று நேரத்தில் தொடங்குகிறது.

Recommended Video

Zimbabwe தொடரில் 2 India வீரர்களுக்கு மட்டும் தீவிர பயிற்சி *Cricket

கேஎல் ராகுல் தலைமையிலான இந்த அணியில், ஷிகர் தவானை தவிர மற்ற வீரர்கள் போதிய அனுபவம் இல்லாதவர்கள்.

இதனால் ஜூனியர்கள் எப்படி இன்றைய ஆட்டத்தை விளையாட உள்ளார்கள் என்பதை காண ரசிகர்களிடையே ஆர்வம் எற்பட்டுள்ளது,

6 ஆண்டுகள்

6 ஆண்டுகள்

கேஎல் ராகுல் தனது முதல் ஒருநாள் போட்டியை ஜிம்பாப்வேக்கு எதிராக 2016ஆம் ஆண்டு விளையாடினார். இதில் அவர் அறிமுக போட்டியிலேயே சதம் விளாசி தனது இடத்தை அணியில் உறுதி செய்தார். தற்போது 6 ஆண்டுகளுக்கு பிறகு ராகுலுக்கு இன்னொரு பரீட்சை வந்துள்ளது. இந்த தொடரை வைத்து தான் ராகுலில் கேப்டன் எதிர்காலம் அமைந்திருக்கிறது.

கடும் போட்டி

கடும் போட்டி

மேலும் ராகுல், காயம், கொரோனா என எவ்வித மேட்ச் பிராக்டிஸ் இன்றி 2 மாதத்திற்கு பிறகு கிரிக்கெட் போட்டிக்கு திரும்பியுள்ளார். இதனால் இந்த தொடரில் ரன் குவித்து மீண்டும் அவர் இடத்தை உறுதி செய்ய வேண்டும். இந்த நிலையில், மற்ற இந்திய அணி வீரர்களுக்கு இடையேவும் கடும் போட்டி நிலவுகிறது.

யாருக்கு இடம்

யாருக்கு இடம்

குறிப்பாக பந்துவீச்சு தரப்பில் ஷர்துல் தாக்கூர், தீபக் சாஹர், ஆவேஷ் கான் ஆகிய 3 வீரர்களில் குறைந்தபட்சம் ஒருவருக்கு மட்டுமே உலகக் கோப்பையில் இடம் கிடைக்கும். இதனால் ஜிம்பாப்வே தொடரில் மூன்று வீரர்களும் எப்படி செயல்பட போகிறார்கள் என்பது தேர்வுக்குழுவினரால் கவனிக்கப்படும். இதே போன்று பேட்டிங்கில் சஞ்சு சாம்சன், தீபக் ஹூடா, சுப்மான் கில் இடையே போட்டி நிலவும்.

பிட்ச் ரிப்போர்ட்

பிட்ச் ரிப்போர்ட்

இதனிடையே ஹராரே ஆடுகளம் ரன் குவிப்புக்கு சாதகமாக இருக்கும். பேட்டிற்கு பந்து நன்றாக வரும் என்பதால், பேட்ஸ்மேன்கள் அதிரடியாக ஆடலாம். இங்கு நடைபெற்ற கடைசியாக 2 ஒருநாள் போட்டியில் ஜிம்பாப்வே அணி 304 மற்றும் 291 ரன்கள் என்ற இலக்கை வெற்றிக்கரமாக துரத்தியது.

Story first published: Thursday, August 18, 2022, 17:25 [IST]
Other articles published on Aug 18, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+