Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ZIM: அதிரடி மன்னன் ரிங்கு என்ட்ரி.. பிளேயிங் 11-இல் வைபவ் சூர்யவன்ஷி ஆடுகிறாரா?

ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார். இந்தியா மற்றும் ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 3 போட்டிகள் கொண்ட டி20 தொடரின் முதல் போட்டி ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் தொடங்குகியது.

இந்தப் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், "ஹராரே மைதானத்தில் நான் விளையாடுவது இதுவே முதல் முறை. பயிற்சி விக்கெட்டுகளைப் பார்க்கும்போது பிட்ச்சில் நல்ல பவுன்ஸ் இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். அதனால் முதலில் பந்துவீச முடிவு செய்துள்ளோம்" என்று தெரிவித்தார்.

IND vs ZIM 1st T20 India won the toss Playing XI includes three seamers two debutants for Zimbabwe

இந்திய அணியில் இளம் வீரர் வைபவ் சூர்யவன்ஷி மற்றும் அபிஷேக் சர்மா ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்குகின்றனர். விக்கெட் கீப்பராக இஷான் கிஷன் மற்றும் அதிரடி ஆட்டக்காரர் ரிங்கு சிங் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர். பந்துவீச்சில் வேகப்பந்து வீச்சாளர்களாக மயங்க் யாதவ், அசோக் சர்மா, பிரின்ஸ் யாதவ் மற்றும் சிவம் துபே ஆகியோர் இடம்பெற்றுள்ளனர். முதன்மை சுழற்பந்து வீச்சாளராக ரவி பிஷ்னோய் மட்டுமே சேர்க்கப்பட்டுள்ளார்.

மறுபுறம், சிக்கந்தர் ராசா தலைமையிலான ஜிம்பாப்வே அணியில் பென் கர்ரன் மற்றும் நியூமேன் நயம்ஹுரி ஆகிய இரண்டு புதிய வீரர்கள் சர்வதேச டி20 போட்டிகளில் அறிமுகமாகின்றனர். அந்த அணி 4 வேகப்பந்து வீச்சாளர்கள் மற்றும் ஒரு ஸ்பின்னருடன் களம் இறங்குகிறது. இங்கிலாந்து தொடரின் தோல்விகளால் துவண்டு இருக்கும் இந்திய அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர், ஜிம்பாப்வே மண்ணில் கேப்டனாக தனது முதல் வெற்றியைப் பதிவு செய்வாரா என்ற எதிர்பார்ப்பு உள்ளது.

"4 மாதத்தில் நிறைய ஏற்ற இறக்கம் பார்த்துட்டேன்".. பிளேயிங் 11 நீக்கம் பற்றி வைபவ் சூர்யவன்ஷி பேச்சு

இந்திய அணியின் பிளேயிங் 11:

வைபவ் சூர்யவன்ஷி, அபிஷேக் சர்மா, இஷான் கிஷன் (விக்கெட் கீப்பர்), ஸ்ரேயாஸ் ஐயர் (கேப்டன்), திலக் வர்மா, ரிங்கு சிங், சிவம் துபே, ரவி பிஷ்னோய், பிரின்ஸ் யாதவ், அசோக் சர்மா, மயங்க் யாதவ்.

Story first published: Thursday, July 23, 2026, 16:15 [IST]
Other articles published on Jul 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+