Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணிக்கு மறைமுக வார்னிங் தந்த சிக்கந்தர் ராசா.. 4 ரன்களில் அவுட்டான அவலம்.. சிவம் துபே அபாரம்

ஹராரே: இந்திய அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் ஜிம்பாப்வே அணி தடுமாறி வருகிறது. இந்த தொடருக்கு முன்பாக இந்திய அணி தொடர்ந்து ஆறு டி20 போட்டிகளில் தோல்வியை தழுவியது.டி20 உலக கோப்பையை வென்ற இந்திய அணி அதன் பிறகு நடைபெற்ற அயர்லாந்துக்கு எதிரான இரண்டு டி20 போட்டிகளிலும் இங்கிலாந்துக்கு எதிராக நான்கு டி20 போட்டிகளிலும் இந்திய அணி தோல்வியை தழுவியது.

இந்த சூழலில் ஜிம்பாப்வேக்கு எதிரான முதல் டி20 போட்டிக்கு முன்பு செய்தியாளர் சந்தித்த அந்த அணி கேப்டன் சிக்கந்தர் ராசா, இந்திய அணிக்கு மறைமுகமாக ஒரு எச்சரிக்கை விடுத்தார்.
அதில் இந்திய அணி உலக சாம்பியன் ஆக இருந்தாலும் தற்போது அந்த அணியில் பல மாறுதல்கள் ஏற்பட்டு இருக்கிறது.

Ind vs ZIM

நாங்களும் அண்மையில் சிறப்பாக விளையாடி வருகிறோம். இதனால் இந்த போட்டி இரு அணிகளுக்கும் கடும் சவாலாக இருக்கும். நிச்சயம் இந்தியாவுக்கு சாதகமாக ஒரு தலைப்பட்சமாக இருக்காது என்று கூறியிருந்தார். இந்திய அணிக்கு சிக்கந்தர் ராசா மறைமுக வார்னிங் விட்டிருந்த நிலையில் முதல் டி20 போட்டியில் மாயங் யாதவ், அசோக் சர்மா மற்றும் பிரின்ஸ் யாதவ் ஆகியோர் அபாரமாக பந்துவீசி அடுத்தடுத்து விக்கெட்டுகளை வீழ்த்தி ஜிம்பாப்வேவிற்கு கடும் நெருக்கடி கொடுத்தனர்.

இவர் எல்லாம் இந்திய அணியில் விளையாட போகிறாரா? அவ்வளவு ஈஸி ஆயிடுச்சா? ஸ்ரீகாந்த் சாடல்

இவர் எல்லாம் இந்திய அணியில் விளையாட போகிறாரா? அவ்வளவு ஈஸி ஆயிடுச்சா? ஸ்ரீகாந்த் சாடல்

இதனால் பவர் பிளேவில் ஜிம்பாப்வே அணி வெறும் 26 ரன்களை சேர்ப்பதற்குள் மூன்று விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இந்த தருணத்தில் ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ராசா களத்திற்கு வந்து பொறுமையாக விளையாடினார்.

அவரும் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள தடுமாறினார். ஒரு கட்டத்திற்கு மேல் பவர்பிளே முடிந்தவுடன் சிவம் துபே பந்து வீச வந்தார். அவருடைய பந்துவீச்சில் பெரிய ஷாட்கள் ஆடி ரன்களை சேர்க்கலாம் என நினைத்து சிக்கந்தர் ராசா அடித்த ஆட முற்பட்டபோது, பவுண்டரி லைனில் நின்று கொண்டிருந்த சூரியான்ஸ் செட்ஜே பந்தை கேட்ச் பிடித்தார்.

IND vs ZIM: யோ! என்ன மாதிரி பவுலிங் யா இது? டிராகன் போல் நெருப்பை கக்கிய மாயங் யாதவ்

IND vs ZIM: யோ! என்ன மாதிரி பவுலிங் யா இது? டிராகன் போல் நெருப்பை கக்கிய மாயங் யாதவ்

இதனால் சிக்கந்தர் ராசா 7 பந்துகளை எதிர்கொண்ட நிலையில் வெறும் 4 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார். இதன் மூலம் 32 ரன்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்து ஜிம்பாப்வே அணி தடுமாறியது. இந்தியாவுக்கு மறைமுக வார்னிங் கொடுத்த சிக்கந்தர் ராசா 4 ரன்னில் ஆட்டம் இழந்து விட்டதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Story first published: Thursday, July 23, 2026, 17:37 [IST]
Other articles published on Jul 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+