Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ZIM: முதல் டி20யில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் என்ன? கம்பேக் கொடுக்கும் 3 வீரர்கள்

ஹராரே: ஜிம்பாபேவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய அணி மூன்று டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடுகிறது. இதில் முதல் டி20 போட்டி இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு வியாழக்கிழமை நடைபெறுகிறது.

இந்த போட்டியில் பல ஸ்டார் வீரர்களுக்கு ஓய்வளிக்கப்பட்டுள்ள நிலையில் இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. ஸ்ரேயாஸ் ஐயர் இந்திய டி20 அணியின் கேப்டனாக தனது முதல் வெற்றிக்காக போராடுகிறார். சஞ்சு சாம்சனுக்கு ஓய்வு அளிக்கப்பட்டு வைபவ் சூரியயவன்சி இந்த தொடரில் களமிறங்குவதால் பெரும் எதிர்பார்ப்பு ஏற்பட்டிருக்கிறது.

Ind vs ZIM

இந்த நிலையில் முதல் டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எவ்வாறு இருக்கும் என்பதை தற்போது பார்க்கலாம். தொடக்க வீரராக வைபவ் சூர்யவன்சி மற்றும் அபிஷேக் ஷர்மா களமிறங்குவார்கள். மூன்றாவது வீரராக இஷான் கிஷனும், நான்காவது வீரராக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயரும் இடம் பெறுவார்கள்.

IND vs ZIM டி20 தொடர் ஒருதலைபட்சமாக இருக்காது.. இந்திய அணிக்கு வார்னிங் தந்த சிக்கந்தர் ராசா

IND vs ZIM டி20 தொடர் ஒருதலைபட்சமாக இருக்காது.. இந்திய அணிக்கு வார்னிங் தந்த சிக்கந்தர் ராசா

ஐந்தாவது வீரராக துணை கேப்டன் திலக் வர்மா களமிறங்குவார். இந்த சூழலில் ஆறாவது வீரராக இந்திய அணிக்கு கம்பேக் கொடுத்திருக்கும் ரிங்கு சிங் களமிறங்க அதிக வாய்ப்பு உள்ளது. ஏழாவது வீரராக ஆல்ரவுண்டர் சிவம் துமே விளையாடக் கூடும். இதேபோன்று எட்டாவது இடத்தில் சுழற் பந்துவீச்சாளர் ரவி பிஷ்னாய் விளையாடக்கூடும். இல்லை என்றால் அவருக்கு பதில் ஹர்ஷ் துபே அல்லது சூரியன்ஸ் செட்ஜே போன்ற ஆல் ரவுண்டர்களுக்கு வாய்ப்பு கிடைக்கலாம்.

இதனை அடுத்து வேகப்பந்துவீச்சாளர்கள் அனைவரும் அனுபவம் இல்லாதவர்களாக இருக்கின்றார்கள். மணிக்கு 156 கிலோ மீட்டர் வேகத்தில் வீசும் பவுலரான மாயங் யாதவ் காயத்திலிருந்து தற்போது இந்திய அணிக்கு திரும்பிருக்கிறார். இதேபோன்று ஐபிஎல் மற்றும் உள்நாட்டு போட்டிகளில் மணிக்கு 150 கிலோமீட்டர் வேகத்தில் வீசும் அசோக் சர்மா என்ற வேகப் பந்துவீச்சாளரும் அணியில் இடம்பெறக்கூடும்.

2027 உலககோப்பைக்கான இந்திய அணி.. 5 ஸ்டார் வீரர்கள் நீக்கம்.. EX ஆர்சிபி வீரர் வெளியிட்ட பட்டியல்

2027 உலககோப்பைக்கான இந்திய அணி.. 5 ஸ்டார் வீரர்கள் நீக்கம்.. EX ஆர்சிபி வீரர் வெளியிட்ட பட்டியல்

11 வது வீரராக பிரின்ஸ் யாதவ் அல்லது யாஷ் தாக்கூர் என இரண்டு வீரர்கள் ஏதேனும் ஒருவருக்கு வாய்ப்பு வழங்கப்படலாம். இந்த தொடரில் வருண் சக்கரவர்த்தி முதலில் அறிவிக்கப்பட்ட அணியில் இடம் பெற்றிருந்தார். ஆனால் தற்போது காயம் காரணமாக அவர் வெளியேறி உள்ளார். இந்திய அணியின் பேட்டிங் பலம் வாய்ந்ததாக இருந்தாலும் பந்துவீச்சில் அனுபவம் இல்லாதது ஒரு மைனஸ் ஆக பார்க்கப்படுகிறது. ஜிம்பாப்வே அணி அண்மையில் ஆஸ்திரேலியா, இலங்கை வங்கதேசம் போன்ற நாடுகளில் டி20யில் வீழ்த்தியுள்ளதால் அவர்களையும் எளிதாக எண்ணிவிட முடியாது.

Story first published: Wednesday, July 22, 2026, 7:05 [IST]
Other articles published on Jul 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+