Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய கேப்டனாக முதல் வெற்றியை பெற்றது மகிழ்ச்சி.. 2 வீரர்களை பாராட்டிய ஸ்ரேயாஸ் ஐயர்

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி ஏழு விக்கெட்டுகள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. டாஸ் வென்று முதலில் பந்து வீசிய இந்திய அணி ஜிம்பாப்வே அணியை 125 ரன்கள் கட்டுப்படுத்தியது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் வைபவ் சூர்யவன்சி 19 பந்துகளில் அரை சதம் அடிக்க, இந்திய அணி 13.2 ஓவர்கள் எல்லாம் மூன்று விக்கெட்டுகளை மட்டுமே இழந்து வெற்றியை எட்டியது.

இதன் மூலம் ஸ்ரேயாஸ், கேப்டனாக முதல் வெற்றியை பதிவு செய்திருக்கிறார். வெற்றிக்கு பின் பேசிய அவர், "எங்கள் அணி வீரர்கள் சிறப்பாக செயல்பட்டு இருக்கிறார்கள். நாங்கள் போட்ட திட்டத்தை களத்தில் அபாரமாக செயல்படுத்தினர். என்னுடைய முதல் வெற்றியை நினைத்து நான் மிக்க மகிழ்ச்சியில் இருக்கின்றேன். நான் ஆடுகளத்தில் பந்து நன்றாக பவுன்ஸ் ஆகும் என்று நினைத்தேன்."

Shreyas Iyer

"ஆனால் ஒரு அளவுக்கு அந்த பவுன்ஸ் இருந்தது. குறிப்பாக எங்கள் அணியின் மாயங் யாதவ் சிறப்பான ஒரு தொடக்கத்தை எங்களுக்கு பெற்றுத் தந்தார். அவர் பேட்ஸ்மேன்க்கு கொஞ்சம் கூட பந்தை அடிக்க இடைவெளியே தரவில்லை. இதை போன்று வைபவ் பேட்டிங்கில் வந்து எங்களுக்கு பிரமாதமான ஒரு தொடக்கத்தை பெற்று தந்தார்."

IND vs ZIM: பிளாஸ்டு! பிளாஸ்டு! இந்திய அணி வேற லெவல் பவுலிங்.. 125 ரன்களில் சுருண்ட ஜிம்பாப்வே

IND vs ZIM: பிளாஸ்டு! பிளாஸ்டு! இந்திய அணி வேற லெவல் பவுலிங்.. 125 ரன்களில் சுருண்ட ஜிம்பாப்வே

"ஆடுகளத்தை அவர் சிறப்பாக அறிந்து அதன் பிறகு பார்ட்னர்ஷிப்பை உருவாக்கி விளையாடினார். வைபவ் கொஞ்சம் கூட பயமே இன்றி சிறப்பாக விளையாடினார். அவருடைய இன்னிங்ஸை பார்க்கும்போது பிரம்மாண்டமாக இருந்தது. அவர் மைதானத்திற்கு வரும்போது நல்ல உத்வேகத்துடன் இருந்தார். ஜிம்பாவே அணி வீரர்களும் ஆடுகளத்தை புரிந்து கொண்டு விளையாடத் தொடங்கினார்கள்."

கம்பீர் கிடையாது.. ஜிம்பாப்வே தொடரில் இவர் தான் இந்திய அணியின் பயிற்சியாளர்

கம்பீர் கிடையாது.. ஜிம்பாப்வே தொடரில் இவர் தான் இந்திய அணியின் பயிற்சியாளர்

"அதனால் நான் பவுலர்களை தொடர்ந்து மாற்றிக் கொண்டே இருந்தேன்" என்று ஸ்ரேயாஸ் ஐயர் கூறினார். தோல்வி குறித்து பேசிய ஜிம்பாப்வே அணி கேப்டன் சிக்கந்தர் ராசா ஆடுகளத்தில் இருந்த ஈரப்பதம் பவுலர்களுக்கு சாதகமாக மாறியது என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் நாங்கள் பௌண்டரிகளை அதிகம் அடிக்க தவறிவிட்டோம் என்றும் முதல் பனிரெண்டு ஓவர் வரை ஆடுகளம் பவுலிங்கிற்கு சாதகமாக இருந்ததாகவும் கூறியுள்ளார்.

Story first published: Thursday, July 23, 2026, 20:33 [IST]
Other articles published on Jul 23, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+