For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IND vs ZIM: அறிமுகமாகும் சிஎஸ்கே வீரர்? இந்திய அணியின் பிளேயிங் லெவனில் யார்? 2 மாற்றங்கள் நிச்சயம்!

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான 4வது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் சிஎஸ்கே அணியின் இளம் வீரர் துஷார் தேஷ்பாண்டே அறிமுகம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளி வந்துள்ளது. இந்த சூழலில் 4வது டி20 ஆட்டத்தில் இந்திய அணியின் பிளேயிங் லெவன் எப்படி இருக்கும் என்று பார்க்கலாம்.

இந்தியா - ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான 4வது டி20 போட்டி ஹராரே மைதானத்தில் நடக்கவுள்ளது. இதுவரை நடந்த 3 போட்டிகளில் ஜிம்பாப்வே ஒரு போட்டியிலும், இந்திய அணி 2 போட்டிகளிலும் வென்றுள்ளன. முதல் போட்டியில் அடைந்த தோல்விக்கு பின் இந்திய அணி வீரர்கள் களத்தில் வெளிப்படுத்தும் முதிர்ச்சி இந்திய அணி கம்பேக்கிற்கு காரணமாக அமைந்துள்ளது.

ind vs zim shubman gill abhishek sharma sanju samson

அதேபோல் அனுபவ வீரர்களான சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் ஆகியோர் இந்திய அணிக்கு திரும்பி இருப்பதும் வலிமையை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் 4வது டி20 போட்டியில் இந்திய அணியின் பிளேயிங் லெவனில் மாற்றம் செய்யப்பட வாய்ப்புகள் உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஏனென்றால் டாப் ஆர்டரில் விளையாடும் ஜெய்ஸ்வால், சுப்மன் கில், அபிஷேக் சர்மா மற்றும் ருதுராஜ் ஆகிய 4 பேரும் தொடக்க வீரர்கள் தான்.

இவர்களுக்கு பின் சஞ்சு சாம்சன், ரிங்கு சிங், சிவம் துபே, வாஷிங்டன் சுந்தர் ஆகியோர் பேட்டிங் வரிசையில் உள்ளனர். இதனால் டாப் ஆர்டரில் சில இளம் வீரர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் துருவ் ஜுரெல் மற்றும் ரியான் பராக் இருவருக்கும் முதல் 2 போட்டிகளில் ஒரு முறை மட்டுமே பேட்டிங் செய்ய வாய்ப்பு கிடைத்தது.

இதனால் அபிஷேக் சர்மா நீக்கப்பட்டு அவருக்கு பதிலாக ரியான் பராக் சேர்க்கப்பட வாய்ப்புகள் உள்ளதாக பார்க்கப்படுகிறது. அதேபோல் பவுலிங்கில் முகேஷ் குமார் மற்றும் ஆவேஷ் கான் இருவரும் 3 டி20 போட்டிகளிலும் விளையாடி தங்களின் திறமையை நிரூபித்துள்ளனர். இதனால் 4வது டி20 போட்டியில் சிஎஸ்கே வீரர் துஷார் தேஷ்பாண்டேவுக்கு வாய்ப்பு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏனென்றால் ஜிம்பாப்வே டி20 தொடரில் இந்திய அணியில் தேர்வான 14 வீரர்களுக்கும் ஏதேனும் ஒரு போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. ஆனால் துஷார் தேஷ்பாண்டே மட்டும் தான் 3 டி20 போட்டிகளிலும் பெஞ்சில் இருக்கிறார். இதன்பின் இலங்கை டி20 தொடருக்கு சீனியர் வீரர்கள் கம்பேக் கொடுக்கும் பட்சத்தில், துஷார் தேஷ்பாண்டேவின் இந்திய அணி அறிமுகம் கால தாமதமாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Friday, July 12, 2024, 21:03 [IST]
Other articles published on Jul 12, 2024
English summary
IND vs ZIM: 2 Changes to be happen in the India playing XI against Zimbabwe in the 4th T20 Match
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+