இந்தியாவில் மவுசை இழக்கும் கிரிக்கெட்.. ஜிம்பாப்வே தொடரை ஒளிபரப்ப ஆள் இல்லை..எந்த சேனலில் பார்ப்பது?
மும்பை: இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டியை ஒளிபரப்ப யாரும் முன்வராத சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்திய அணி ஜிம்பாப்வே போன்ற நாட்டுக்கு சுற்றுப் பயணம் வந்தால், தொலைக்காட்சி உரிமையை விற்றால் தான் ஜிம்பாப்வே கிரிக்கெட் வாரியத்துக்கு பணம் கிடைக்கும்.
ஆனால் தற்போது அது கேள்விக்குறியாகி விட்டது.ஒரு காலத்தில், இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டியை நேரலை செய்ய 50 ஆயிரம் ரூபாய் பணத்தை தூர்தசனுக்கு பிசிசிஐ செலுத்தியது.

சச்சின் காலம்
ஆனால் சச்சின் டெண்டுல்கரின் வருகைக்கு பிறகு அதே தூர்தசன், பிசிசிஐக்கு 5 லட்சம் ரூபாய் வழங்கி போட்டியை நேரலை செய்வதற்கான ஒப்பந்தத்தை வாங்கியது. அதன் பிறகு, தொலைக்காட்சி உரிமம் மூலம் கோடி, கோடியாக பிசிசிஐ காட்டில் மழை பொழிந்தது. இந்திய கிரிக்கெட் அணி விளையாடும் போட்டியை ஒளிபரப்பு செய்ய தனியார் தொலைக்காட்சி நிறுவனங்களுக்கு இடையே கடும் போட்டி நடைபெறும்.

ஆர்வம் இல்லை
அவ்வளவு என் இந்திய அணி ஜிம்பாப்வே, வங்கதேசம் ஆகிய நாடுகளுக்கு சென்றால் கூட, தொலைக்காட்சி நிறுவனங்கள் கோடிகளை கொட்ட தயாராகி விட்டது. ஆனால் தற்போது காட்சி மெல்ல மெல்ல மாறி வருகிறது. அண்மையில் நடைபெற்ற வெஸ்ட் இண்டீஸ் தொடரில் இந்திய அணி விளையாடிய போட்டியை நேரலையில் ஒளிபரப்ப எந்த தனியார் தொலைக்காட்சி நிறுவனமும் முன் வரவில்லை.

எந்த சேனல்?
இதனால் அந்தப் போட்டிகளை தூர்தர்ஷன் தொலைக்காட்சி தான் ஒளிபரப்பு செய்தது. தற்போது மீண்டும் இந்திய அணி வரும் 18ஆம் முதல் ஜிம்பாப்வே அணியுடன் 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த தொடர் கூட இந்திய நேரப்படி மதியம் 12.45 மணிக்கு தொடங்குகிறது. ஆனால் இதை ஒளிபரப்பு செய்யவும் எந்த சேனலும் அர்வம் காட்டவில்லை. இதனையடுத்து இந்த தொடரை மீண்டும் தூர்தசன் சேனல் தான் ஒளிபரப்பு செய்ய உள்ளது. ஆன் லைனில் Fancode நிறுவனம் நேரலை செய்கிறது.
Recommended Video

மவுசு இல்லை
இதற்கு மூன்று காரணங்கள் முன் வைக்கப்படுகின்றன. ஐபிஎல் தொடரை ஒளிபரப்புவதற்காக பல்லாயிரம் கோடிகளை தொலைக்காட்சி நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இதனால் இது போன்ற தொடரில் பணத்தை செலவிட யாரும் விரும்பவில்லை. இதே போன்று, ஒருநாள் போட்டிகளை காண ரசிகர்களுக்கு போதிய ஆர்வம் இல்லை. மூன்றாவது காரணம், நட்சத்திர வீரர்கள் இல்லாததால், இது போன்ற தொடர் எவ்வித முக்கியத்துவத்தையும் ஏற்படுத்தவில்லை.


Click it and Unblock the Notifications