Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

குட்டையை குழப்பிய ராகுல்.. 1 ரன்னில் அவுட்டாகி வெளியேறிய சோகம் .. ஏன் இவ்வளவு சுயநலம்?

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது ஒருநாள் போட்டியில் இந்திய அணி கேப்டன் கே எல் ராகுல் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி அளித்தார்.

Recommended Video

IND vs ZIM இந்திய வீரர் Deepak Chahar இல்லை! Zimbabwe தடுமாற்றம் *Cricket

இந்த ஆட்டத்தில் கேஎல் ராகுல் தொடக்க வீரராக களம் இறங்கியது விமர்சனத்திற்கு உள்ளாகி இருக்கிறது.

ஜிம்பாப்வே தொடரில் நட்சத்திர வீரர்கள் யாரும் அணியில் இல்லை. இதனால் இளம் வீரர்களுக்கு இந்த தொடர் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.

சுயநல முடிவு

சுயநல முடிவு

ஆனால் கே எல் ராகுல் தனது சுயநலத்தால் இளம் வீரர் சும்மான் கில்லின் வாய்ப்பை பிடுங்கி அதனை பயன்படுத்திக் கொண்டு தற்போது சொதப்பி இருக்கிறார். ஒருநாள் கிரிக்கெட் அணியில் கே.எல் ராகுலுக்கு நடு வரிசையில் நான்காவது வீரராக களமிறங்க வாய்ப்பு வழங்கப்படுகிறது. இதனால் ராகுல் தலைகீழாக நின்றாலும் அவருக்கு தொடக்க வீரராக வாய்ப்பு பெரிய தொடர்களில் கிடைப்பது மிகவும் கடினம்.

வீணடித்த வாய்ப்பு

வீணடித்த வாய்ப்பு

ஆனால் இதனை புரிந்து கொள்ளாத ராகுல் சீனியர்கள் இல்லாத போது தமக்கு கிடைக்கும் வாய்ப்பை தொடக்க வீரராக பயன்படுத்திக் கொள்கிறார்.கேஎல் ராகுல் பெரிய தொடர்களில் நம்பர் 4ல் களமிறங்கினால் சிறிய தொடரிலும் அதே இடத்தில் களமிறங்கி தனது திறமையையும் அனுபவத்தையும் வளர்த்துக் கொள்வது தான் சரி. ஜிம்பாப்வேவிற்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் கூட கே எல் ராகுலை தொடக்க வீரராக களம் இறக்காமல் நடு வரிசையில் விளையாட விவி எஸ் லக்ஷ்மன் அறிவுறுத்தி இருந்தார்.

1 ரன்னில் அவுட்

1 ரன்னில் அவுட்

தற்போது கே எல் ராகுல் இரண்டாவது ஒருநாள் போட்டியில் சுப்மான் கில் இடத்தை பிடுங்கிக் கொண்டு தொடக்க வீரராக களமிறங்கினார்.சுமார் இரண்டு மாதத்திற்கு பிறகு கிரிக்கெட் விளையாடிய ராகுல் 5 பந்துகளை மட்டுமே எதிர்கொண்டு ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். இதேபோன்று அணியில் இன்னொரு தொடக்க வீரரான இஷான் கிசனுக்கும் ராகுல் துரோகம் செய்துள்ளார். காரணம் இஷான் கிஷன் கிரிக்கெட் விளையாடியதிலிருந்து தொடக்க வீரராக அறியப்பட்டவர்.சும்மான்கில்லுக்கு வாய்ப்பு இல்லை என்றால் இஷான் கிசனுக்கு தான் தொடக்க வீரராக வாய்ப்பு கொடுத்திருக்க வேண்டும் .

ரசிகர்கள் விமர்சனம்

ரசிகர்கள் விமர்சனம்

ஆனால் ராகுல் அவருக்கும் அந்த இடத்தை கொடுக்கவில்லை. மாறாக இஷான் கிஷனை நடுவரசையில் களமிறக்க அவர் ஆறு ரன்கள் மட்டுமே எடுத்து ஆட்டம் இழந்தார். இதனிடையே எவ்வித மேட்ச் பிரக்டிஸும் இல்லாத ராகுல் ஆசிய கோப்பை தொடருக்கு முன் தனது திறமையை நிரூபிக்க வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். இதனால் 162 ரன்கள் என்ற இலக்கை துரத்தும் போது தமக்கு வாய்ப்பு கிடைக்காது என்ற சுயநலத்தால் அவர் தொடக்க வீரராக களம் இறங்கி இருக்கலாம் என்று ரசிகர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Story first published: Saturday, August 20, 2022, 20:20 [IST]
Other articles published on Aug 20, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+