IND vs ZIM: இந்திய அணி பேட்டிங்கில் 2 வீரர்கள் ஏமாற்றம்.. கடுப்பான பிசிசிஐ
ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணியின் நட்சத்திர வீரர்கள் அபிஷேக் ஷர்மா மற்றும் ஸ்ரேயாஸ் பெரிய ஸ்கோர் குவிப்பார்கள் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், ரசிகர்களை ஏமாற்றும் அடைய செய்தனர்.
இதில் ஸ்ரேயாஸ் ஐயர் ஆவது ஒரு பொறுப்பான பார்ட்னர்ஷிப்பை சேர்த்து ஆட்டம் இழந்த நிலையில் அபிஷேக் ஷர்மா ஒற்றை இலக்கம் ரன்களில் பெவிலியன் திரும்பி ரசிகர்களை கடுப்படைய செய்தார். டி20 உலக கோப்பை வென்ற நிலையில் இந்திய அணி தொடர்ந்து ஆறு டி20 போட்டிகளில் தோல்வியை தழுவியது.

அயர்லாந்து மற்றும் இங்கிலாந்து அணிக்கு எதிராக தொடரை இழந்த இந்திய அணி தற்போது தான் ஜிம்பாப்வே எதிரான முதல் டி20 போட்டியில் வெற்றி பெற்றது. இந்த சூழலில் இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் தொடக்க வீரர்கள் பெரிய பார்ட்னர்ஷிப் அமைக்காதது தான் என்ற குற்றச்சாட்டு இருந்தது.
இதன் காரணமாக தொடக்க வீரராக விளையாடிய சஞ்சு சாம்சன் நீக்கப்பட்டு அவருக்கு பதில் வைபவ் சூர்யவன்சி சேர்க்கப்பட்டார். முதல் டி20 போட்டியில் இந்திய அணி குறைந்த இலக்கை துரத்திய நிலையில் வைபவ் சூர்யவன்சி 18 பந்துகளில் அரை சதம் கடந்து அபாரமாக விளையாடினார். ஆனால் மறு முனையில் நின்ற அபிஷேக் ஷர்மா வெறும் ஒரு ரன்னில் ஆட்டம் இழதார்.
இந்த நிலையில் ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி முதலில் பேட்டிங் செய்ய பணிக்கப்பட்டது. இதில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் ஷர்மா மீண்டும் ஒற்றை இலக்கம் ரன்களில் ஆட்டம் இழந்து ரசிகர்களை வெறுப்பேற்றினார். அபிஷேக் ஷர்மா கடந்த ஐந்து டி20 போட்டிகளில் ஒருமுறை கூட 20 ரன்களை தொடவில்லை.
கடைசியாக ஜூலை நான்காம் தேதி மான்செஸ்டர் நகரில் இங்கிலாந்துக்கு எதிராக நடைபெற்ற டி20 போட்டியில் 43 ரன்கள் எடுத்தார். அதன் பிறகு 10,16,3, 1 என அபிஷேக் ஷர்மா சொற்ப ரன்களில் பெவிலியன் திரும்பினார். அபிஷேக் ஷர்மா திறமை வாய்ந்த வீரராக அறியப்பட்டாலும், தொடர்ந்து அவர் ஒரே மாதிரி விளையாடாமல் போவது ரசிகர்களை கடுப்படைய செய்திருக்கிறது.
ஏற்கனவே சாம்சன் நீக்கப்பட்ட நிலையில் தற்போது அபிஷேக்சர்மாவும் மோசமாக விளையாடி வருகிறார். இதேபோன்று நடுவரிசையில் களம் இறங்கிய கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 20 பந்துகளுக்கு 25 ரன்கள் எடுத்திருந்த நிலையில் பெவிலியன் திரும்பினார்.ஸ்ரேயாஸ் நல்ல தொடக்கத்தை பெற்றாலும் அவர் பெரிய ஸ்கோர் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஆட்டம் இழந்தார்.


Click it and Unblock the Notifications

