Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ZIM: டி20 தொடரை வென்றது இந்தியா..90 ரன்கள் வித்தியாசத்தில் ஜிம்பாப்வே தோல்வி..ஸ்ரேயாஸ் ஹாப்பி

ஹராரே: ஜிம்பாப்வே அணிக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் இந்திய அணி 90 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இதன் மூலம் ஸ்ரேயாஸ் ஐயர் தலைமையிலான இந்திய அணி முதல் முறையாக டி20 தொடரை வென்று அசத்தியிருக்கிறது.

இதன் மூலம் டி20 உலக கோப்பை வென்ற பிறகு தொடர்ந்து இரண்டு டி20 இருதரப்பு தொடரை இழந்த இந்திய அணி தற்போது ஜிம்பாப்வேக்கு எதிரான தொடரை வென்றுள்ளது. முதல் டி20 போட்டியில் வென்ற இந்திய அணி இரண்டாவது டி20 போட்டியில் இன்று ஹராரேவில் மோதியது.

Ind vs ZIM

இதில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணியில் அபிஷேக் ஷர்மா எட்டு ரன்களில் ஆட்டம் இழக்க இளம் வீரர் வைபவ் சூரியவன்ஷி 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்தார். இதில் மூன்று பவுண்டரி, ஒரு சிக்சர் அடங்கும். 29 ரன்களுக்கு இரண்டு விக்கெட் இழந்து இந்திய அணி தடுமாறிய நிலையில், இசான் கிசன், ஸ்ரேயாஸ் ஆகியோர் பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை சரிவில் இருந்து மீட்டனர்.

IND vs ZIM: ஜிம்பாப்வே பவுலிங்கை கொளுத்திய இசான் கிஷன், திலக் வர்மா.. இந்தியா 219 ரன்கள் குவிப்பு

IND vs ZIM: ஜிம்பாப்வே பவுலிங்கை கொளுத்திய இசான் கிஷன், திலக் வர்மா.. இந்தியா 219 ரன்கள் குவிப்பு

ஒருபுறம் இசான் கிஷன் அதிரடியை காட்ட பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தினார். இந்த ஜோடி மூன்றாவது விக்கெட்டுக்கு 66 ரன்கள் சேர்த்தது. இஷான் கிஷன் 20 பந்துகளில் 25 ரன்கள் எடுத்த நிலையில் ஆட்டம் இழந்தார். அதன் பிறகு திலக் வர்மா, இசான் கிசன் ஜோடி சேர்ந்து பட்டையை கிளப்பினர். இருவரும் ஜிம்பாப்வே பந்துவீச்சை சுளுக்கு எடுத்தனர். சிறப்பாக விளையாடிய இசான் கிஷன் சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் 44 பந்துகளில் 81 ரன்கள் எடுத்து ஆட்டம் இழந்தார்.

இதில் ஒன்பது பவுண்டரி, 2 சிக்சர் அடங்கும். திலக் வர்மா கடைசி வரை ஆட்டமிழக்காமல் 29 பந்துகளில் 60 ரன்கள் சேர்த்தார். இறுதியில் ரிங்கு சிங் 12 ரன்கள் சிவம் துபே 6 ரன்கள் எடுக்க இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் எடுத்தது. 220 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது.

தொடக்க வீரர் பென்னட் அதிரடி காட்டி மூன்று பவுண்டரி மூன்று சிக்சர் என 19 பந்துகளில் 32 ரன்கள் எடுத்தார். மறுபுறம் பென் கரன் ஒரு ரன்னில் ஆட்டம் இழந்தார். அதன் பின்பு களமிறங்கிய ஜிம்பாப்வே அணி வீரர்கள் ரவி பிஷ்னாய் மற்றும் பிரின்ஸ் யாதவ் பந்துவீச்சில் சிக்கி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

IND vs ZIM: திலக் வர்மா மாபெரும் சாதனை.. ரோகித், கோலி, ரெய்னா பட்டியலில் இணைந்தார்

IND vs ZIM: திலக் வர்மா மாபெரும் சாதனை.. ரோகித், கோலி, ரெய்னா பட்டியலில் இணைந்தார்

நடுவரிசையில் ரியன் புர்ல் ரியான் 20 ரன்களும், மருமானி 24 ரன்களும் எடுத்தனர். மற்ற வீரர்கள் அனைவரும் சொற்ப ரன்களில் வெளியேற ஜிம்பாப்வே அணி 17.5 ஓவரில் 129 ரண்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. இந்திய பந்துவீச்சு தரப்பில் அறிமுக வீரர் யாஷ் தாக்கூர் இரண்டு விக்கெட்களும், பிரின்ஸ் யாதவ் 2 விக்கெட்களும் அபிஷேக் ஷர்மா மூன்று விக்கெட்டுகளையும் கைப்பற்றி அசத்தினர். மூன்றாவது டி20 போட்டி சம்பிரதாய ஆட்டமாக ஞாயிற்றுக்கிழமை நடைபெறுகிறது.

Story first published: Saturday, July 25, 2026, 20:12 [IST]
Other articles published on Jul 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+