Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ZIM: ஜிம்பாப்வே பவுலிங்கை கொளுத்திய இசான் கிஷன், திலக் வர்மா.. இந்தியா 219 ரன்கள் குவிப்பு

ஹராரே: ஜிம்பாப்வேக்கு எதிரான இரண்டாவது டி20 போட்டியில் டாஸ் வென்று முதலில் பேட்டிங் செய்த இந்திய கிரிக்கெட் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 5 விக்கெட் இழப்பிற்கு 219 ரன்கள் குவித்துள்ளது. ஹராரே ஸ்போர்ட்ஸ் கிளப்பில் நடைபெறும் இப்போட்டியில் வெற்றி பெற்றால், 3 போட்டிகள் கொண்ட இந்தத் தொடரில் இந்தியா 2-0 என்ற கணக்கில் கைப்பற்ற முடியாத முன்னிலையைப் பெறும்.

முன்னதாக வியாழக்கிழமை நடைபெற்ற முதல் போட்டியில் இந்திய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது. 15 வயதான வைபவ் சூர்யவன்ணி வழக்கம் போல் அதிரடி காட்டினார். 3 பவுண்டரி , 1 சிக்சர் என 9 பந்துகளில் 20 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுமுணையில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட அபிஷேக் சர்மா 8 ரன்களில் ஆட்டமிழக்க, ஸ்ரேயாஸ் ஐயர் 20 பந்துகளிஙல 25 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

Ind vs ZIM

இந்திய அணியின் பேட்டிங்கில் அதிரடி ஆட்டக்காரர் இஷான் கிஷன் மற்றும் திலக் வர்மா ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியது. இஷான் கிஷன் 43 பந்துகளில் 81 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார். சதம் அடிப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், நியாம்ஹூரி வீசிய 18ஆவது ஓவரின் முதல் பந்தில் பிரையன் பென்னட்டிடம் கேட்ச் கொடுத்து அவர் வெளியேறினார்.

சிவம் துபே-ல்லாம் ஆல்ரவுண்டர்னா நானும் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் தான்.. ஸ்ரீகாந்த் கிண்டல்

சிவம் துபே-ல்லாம் ஆல்ரவுண்டர்னா நானும் ஒரு சிறந்த ஆல்ரவுண்டர் தான்.. ஸ்ரீகாந்த் கிண்டல்

மற்றொரு முனையில் அதிரடியாக விளையாடிய திலக் வர்மா வெறும் 23 பந்துகளில் தனது அரைசதத்தைக் கடந்தார். அவர் 29 பந்துகளில் 60 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் இருந்தார்.கடைசி கட்டத்தில் ரின்கு சிங் 5 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து பிராட் எவன்ஸ் பந்துவீச்சில் ஆட்டமிழந்தார்.

IND vs ZIM: இந்திய அணி பேட்டிங்கில் 2 வீரர்கள் ஏமாற்றம்.. கடுப்பான பிசிசிஐ

IND vs ZIM: இந்திய அணி பேட்டிங்கில் 2 வீரர்கள் ஏமாற்றம்.. கடுப்பான பிசிசிஐ

அதன்பின் களமிறங்கிய ஷிவம் துபே 3 பந்துகளில் 6 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜிம்பாப்வே தரப்பில் பிராட் எவன்ஸ் வீசிய இறுதி ஓவரில் இந்திய அணி 9 ரன்கள் எடுத்தது. ஜிம்பாப்வே அணியின் பந்துவீச்சில் கேப்டன் சிகந்தர் ரசா 4 ஓவர்களில் விக்கெட் ஏதுமின்றி 47 ரன்களை வாரி வழங்கினார்.

Story first published: Saturday, July 25, 2026, 18:25 [IST]
Other articles published on Jul 25, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+