Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கவலைப்படாதீங்க அபிஷேக்.. பெரிய ஜாம்பவான்களே அறிமுக டி20 போட்டியில் டக் அவுட் ஆகி இருக்கிறார்கள்

மும்பை : ஜிம்பாவேக்கு எதிரான முதல் டி20 போட்டியில் இந்திய அணி தோல்வியை தழுவி இருப்பது கிரிக்கெட் ரசிகர்களை அதிர்ச்சி அடைய செய்திருக்கிறது. உலக சாம்பியன் பட்டம் பெற்று ஒரு சில நாட்களிலேயே இந்தியா ஜிம்பாப்வே யிடம் தோற்று இருக்கிறது.

ஆனால் உலக கோப்பையில் பங்கேற்ற எந்த ஒரு வீரரும் இந்த தொடரின் பங்கேற்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இந்தியா தங்களுடைய பி அணியை அனுப்பி இந்த தொடரில் விளையாட வைத்திருக்கிறது. ரோகித் சர்மா, விராட் கோலி ஜடேஜா போன்ற வீரர்கள் ஓய்வு பெற்றுள்ளனர்.

ind vs zim shubman gill abhishek sharma

இந்த நிலையில் அடுத்த இளம் நட்சத்திரங்கள் இந்த தொடரில் விளையாடுகின்றனர். இதில் யுவராஜ் சிங் போல் அதிரடியாக விளையாடுகிறார் என்று அனைவரும் பாராட்டிய அபிஷேக் சர்மா தன்னுடைய முதல் சர்வதேச டி20 போட்டியில் டக் அவுட் ஆகி வெளியேறியது சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த நிலையில் டக் அவுட் ஆகிவிட்டோம் என அபிஷேக் ஷர்மா கவலைப்பட தேவையில்லை.

ஏனென்றால் இந்திய டி20 அணிக்காக தங்களுடைய முதல் சர்வதேச போட்டியில் விளையாடிய இரண்டு ஜாம்பவான்கள் டக் அவுட் ஆகி இருக்கிறார்கள். அவர்கள் யார் என்று தற்போது பார்க்கலாம். இதற்கு முன்பு 2021 ஆம் ஆண்டு இந்திய அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி20 போட்டியில் விளையாடியது. இதில் அறிமுக வீரராக களமிறங்கிய பிரித்வி ஷா முதல் பந்திலேயே கோல்டன் டக் ஆகி வெளியேறி இருக்கிறார்.

இந்தப் பட்டியலில் இரண்டாவது இடத்தை பிடித்திருப்பவர் இந்திய அணியின் அடுத்த கேப்டன் என்று கருதப்படும் கே எல் ராகுல் தான். இதே ஜிம்பாப்பே மண்ணில் 2016 ஆம் ஆண்டு இந்தியா சுற்றுப்பயணம் மேற்கொண்ட போது கே எல் ராகுல் தன்னுடைய முதல் போட்டியில் விளையாடினார். அப்போது முதல் பந்தில் கே எல் ராகுல் தன்னுடைய விக்கெட்டை பறி கொடுத்தார்.

இந்த போட்டியில் இந்தியா இரண்டு ரன்கள் வித்தியாசத்தில் தோல்வியை தழுவிய குறிப்பிடத்தக்கது. இந்த பட்டியலில் முதலிடத்தில் இருப்பது யார் என்று தெரிந்தால் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள். ஏனென்றால் அது மகேந்திர சிங் தோனி. 2006 ஆம் ஆண்டு இந்திய அணி தென்னாப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் கொண்ட போது தன்னுடைய முதல் டி20 போட்டியில் தோனி விளையாடினார்.

இதில் தோனி டக் அவுட் ஆகி வெளியேறினார். இந்த போட்டியில் தோனி பேட்டிங் வரிசையில் நம்பர் நான்காம் இடத்தில் இறங்கினார். இதனால் அபிஷேக் ஷர்மா டக் அவுட் ஆகிவிட்டோம் என கவலைப்படாமல் தோனி, கே எல் ராகுல் போல் பெரிய வீரராக வரவேண்டும் என முயற்சி செய்வது அவருக்கு சிறந்தது. இதனால் இன்று இரண்டாவது டி20 போட்டியில் அபிஷேக் ஷர்மா பதிலடி கொடுப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Story first published: Sunday, July 7, 2024, 13:26 [IST]
Other articles published on Jul 7, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+