Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ZIM - 3வது டி20 போட்டி பிளேயிங் XI- இந்திய அணியில் 3 மாற்றம்.. யார் வெளியே? யார் உள்ளே?

ஹராரே : இந்தியா, ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையே மூன்றாவது t20 போட்டி ஹராரேவில் புதன்கிழமை இந்திய நேரப்படி மாலை 4:30 மணிக்கு நடைபெறும். ஐந்து போட்டிகள் கொண்ட இந்த தொடரில் இரு அணிகளும் தலா ஒன்றுக்கு ஒன்று என்ற கணக்கில் சம நிலையில் இருக்கின்றது.

கில் தலைமையில் களமிறங்கிய இந்த அணியில் முற்றிலும் இளம் வீரர்கள் களமிறங்கினர். முதல் இரண்டு போட்டியில் டி20 உலக கோப்பை அணியில் வென்ற யாருமே இடம்பெறாத நிலையில் தற்போது மூன்று வீரர்கள் ஜிம்பாப்வே தொடருக்கு வந்திருக்கிறார்கள்.

ind vs zim shubman gill abhishek sharma sanju samson

இதனால் பிளேயிங் லெவனில் யார் இருப்பார்? யார் செல்வார் என்ற குழப்பம் ஏற்பட்டு இருக்கிறது. இந்த நிலையில் தொடக்க வீரராக கேப்டன் கில் இருப்பார். ஆனால் அபிஷேக் ஷர்மா முதல் போட்டியில் சதம் அடித்ததால், அவரை அணியை விட்டு நீக்குவது என்பது சரியான விஷயம் கிடையாது.

இதனால் அபிஷேக் சர்மாவுக்கு இரண்டாவது அல்லது மூன்றாவது இடத்தில் வாய்ப்பு கிடைக்கலாம். இதனால் ஜெய்ஸ்வால் நிச்சயம் இருப்பார். இல்லையேனில் ஜெய்ஸ்வால் இரண்டு அல்லது மூன்றாவது இடத்திற்கு மாற வாய்ப்பு இருக்கிறது. இதனால் நடு வரிசையில் நான்காம் இடத்தில் ருதுராஜ் களமிறங்க கூடும். ஐந்தாவது இடத்தில் விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் சஞ்சு சாம்சன் அணியில் இருக்க அதிக வாய்ப்பு இருக்கிறது.

ஆறாவது இடத்தில் அதிரடி ஆல்ரவுண்டர் சிவம் துபே விளையாடக் கூடும். ஏழாவது இடத்தில் ரிங்கு சிங் இடம்பெறக்கூடும். எட்டாம் இடத்தில் வாஷிங்டன் சுந்தரும், ஒன்பதாவது இடத்தில் ரவி பிஸ்னாயும் விளையாடக் கூடும். இதனால் பத்தாவது இடத்தில் ஆவேஷ் கான் மற்றும் 11-வது இடத்தில் முகேஷ் குமார் விளையாடக் கூடும்.

இதனால் இரண்டாவது போட்டியில் விளையாடிய துருவ் ஜுரேல் ரியான் பராக், சாய் சுதர்சன், ஆகியோர் அணியை விட்டு நீக்கப்பட வாய்ப்பு இருக்கிறது. இந்த பிளேயிங் லெவனில் ருதுராஜ் நடுவரிசையில் விளையாடுவது அவருக்கு ஏற்ற இடமாக இருக்குமா? இல்லை அபிஷேக் ஷர்மா மூன்றாவது அல்லது நான்காவது வீரராக களமிறங்குவது அவருக்கு சரியாக வருமா என்ற கேள்வி எழும்.

பிளேயிங் லெவன் (உத்தேசம்) 1, சுப்மன் கில், 2, ஜெய்ஷால், 3, ருதுராஜ், 4, அபிஷேக் சர்மா, 5, சஞ்சு சாம்சன், 6, சிவம் துபே, 7,ரிங்கு சிங், 8, வாசிங்டன் சுந்தர், 9, ரவி பிஸ்னாய், 10, ஆவேஷ் கான், 11, முகேஷ் குமார்.

Story first published: Tuesday, July 9, 2024, 16:48 [IST]
Other articles published on Jul 9, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+