Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

IND vs ZIM - இந்திய அணியில் 4 மாற்றம்.. சதம் அடித்தவருக்கு வாய்ப்பு இருக்கா? கில் எடுத்த முடிவு

மும்பை : இந்தியா ஜிம்பாப்வே அணிகளுக்கு இடையிலான மூன்றாவது டி20 போட்டி ஹராரேவில் இன்று தொடங்கியது. இந்த போட்டிக்கான டாசை தொடர்ந்து மூன்றாவது முறையாக இந்திய அணியின் கேப்டன் கில் வென்றார். இதுகுறித்து பேசிய அவர் இன்றைய ஆட்டத்தில் தாங்கள் முதலில் பேட்டிங் செய்யப் போவதாக தெரிவித்துள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர், ஆடுகளத்தில் ஈரப்பதம் கொஞ்சம் இருந்தாலும் பேட்டிங்கிற்கு சாதகமான பிச்சாக இது தெரிகிறது. அது மட்டுமில்லாமல் உலக கோப்பையை வென்ற சாம்பியன்கள் மூன்று பேர் எங்கள் அணிக்கு திரும்பி இருக்கிறார்கள்.

ind vs zim shubman gill abhishek sharma sanju samson

சஞ்சு சாம்சன், ஜெய்ஸ்வால் மற்றும் சிவம் துபே ஆகிய மூன்று வீரர்களுமே பிளேயிங் லெவனில் இடம் பிடித்திருக்கிறார்கள். இதேபோன்று வேகப்பந்துவீச்சாளர் முகேஷ் குமாருக்கு இன்றைய ஆட்டத்தில் ஓய்வு வழங்கப்பட்டிருக்கிறது. அவருக்கு பதிலாக கலீல் அகமத் அணிக்கு திரும்பிருக்கிறார்.

எங்கள் அணியில் சமநிலை சிறப்பாக இருப்பதாகவே நான் கருதுகின்றேன். இன்றைய ஆட்டத்தில் வெற்றி பெற முயற்சி செய்வோம் என்று அவர் கூறினார். ஜெய்ஸ்வால் அணிக்கு திரும்பி இருப்பதால் கடந்த போட்டியில் சதம் விளாசிய அபிஷேக் ஷர்மா அணியை விட்டு நீக்கப்படுவார் என்ற தகவல் வெளியானது. ஆனால் கில் அப்படி ஒரு முடிவை எடுக்கவில்லை.

இதற்கு பதிலாக ஜெய்ஸ்வால் அபிஷேக் ஷர்மா என இருவரையும் தொடக்க வீரராக களம் இறக்கிவிட்டு கில் மூன்றாவது இடத்திற்கு வருவார் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் அப்படி செய்யாமல் கில்லே ஓப்பனிங் இறங்கினார். இதனால் அபிஷேக்கிற்கு பேட்டிங் வரிசையில் என்ன இடம் என்று தெரியவில்லை. மேலும் அதிரடி வீரர் ரிங்கு சிங், வாஷிங்டன் சுந்தர், ஆகியோருக்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. சிவம் துபே டி20 உலக கோப்பை போல் ஆறாவது இடத்தில் களமிறங்குவார்.

நமது மைக்கேல் தளம் இந்த பேட்டிங் வரிசையை தான் சரியாக கணித்திருந்தது. அதேபோல் தற்போது கில்லும் அணியை தேர்வு செய்திருக்கிறார். இதனால் ரியான் பராக், சாய் சுதர்சன், துருவ் ஜூரல், முகேஷ் குமார் ஆகியோர் அணியில் இருந்து தற்போது நீக்கப்பட்டிருக்கிறார்கள்.

கடந்த டி20 உலக கோப்பையில் ஜெய்ஸ்வால் ஒரு போட்டியில் கூட விளையாடாத நிலையில் இந்த தொடரில் அவர் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது.கடந்த டி20 உலக கோப்பையில் ஜெய்ஸ்வால் ஒரு போட்டியில் கூட விளையாட நிலையில் இந்த தொடரில் அவர் என்ன செய்யப் போகிறார் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்கள் மத்தியில் இருக்கின்றது.

Story first published: Wednesday, July 10, 2024, 16:26 [IST]
Other articles published on Jul 10, 2024
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+